யோகிபாபுவை இயக்கும் ஹெச்.வினோத்!

Filed under: சினிமா |

நகைச்சுவை மற்றும் கலந்த அரசியல் கலந்த திரைப்படம் ஒன்றை ஹெச். வினோத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இயக்குனர் ஹெச்.வினோத் “சதுரங்க வேட்டை,” “தீரன் அதிகாரம் ஒன்று,” “நேர்கொண்ட பார்வை,” “வலிமை,” “துணிவு” ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கமல்ஹாசனின் 233வது படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. கமல், கல்கி, மணிரத்னத்துடன் இணைந்து “தக்லைஃப்” ஆகிய படங்களில் பிஸியாக இருப்பதால், கமல் 233 படம் தாமதமாகி வருகிறது. அதேபோல் “தீரன் அதிகாரம்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் தாமதமாகி வருவதால் ஹெச். வினோத் புதிய முடிவெடுத்துள்ளார். பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவை வைத்து, ஒரு நகைச்சுவை கலந்த அரசியல் படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது