நியூஸ் 7 செய்தி தொலைக்காட்சியில் செய்தியாளர் நேசபிரபு மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதில் அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதிமுக, பாமக, உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் “பத்திரிக்கையாளர்களுக்கே பாதுகாப்பில்லை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன? பல்லடம் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது மர்ம நபர்கள் கொடூர தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. தன் உயிருக்கு ஆபத்து என போலீசிடம் தெரிவித்தபோது ஒரு காவலர் ஸ்டேசனில் ஆளில்லை பாதுகாப்பு வேண்டுமெனில் நீங்களே ஸ்டேசன் வருமாறு கூறியுள்ளார். ஒரு காவலர் இப்படி பேசலாமா? அதன் உள்நோக்கம் என்ன? போலி திராவிர்ட மாடல் அரசில் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுக்காப்பில்லை என்றால் மக்களின் நிலை என்ன ஆகும்? நேசபிரபு மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நேசபிரபுக்கு போதிய சிகிச்சை கொடுக்கவும், இழப்பீடு வழங்கவும் அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.