பட்ஜெட் தயாரித்த ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு அல்வா கிண்டி வழங்கப்படுவது வழக்கம்.
நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டிய புகைப்படம் இணையத்தில் வைரலானது. பட்ஜெட்டில் இந்த ஆண்டும் தமிழகத்திற்கு அல்வா தான் கொடுக்கப் போகிறார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். நேற்று சென்னை பல்லாவரம் பகுதியில் நடந்த மொழிப்போர் தியாகிகள் குறித்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பட்ஜெட்டுக்கு முன்பாக நேற்று நிர்மலா சீதாராமன் அருள்வாக்கு கூறியுள்ளார். கண்டிப்பாக இந்த ஆண்டும் தமிழ்நாட்டுக்கு அல்வா தான் கொடுக்கப் போகிறார்கள். அதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு அல்வா கொடுக்க நாம் தயாராக வேண்டும்” என்று பேசிவுள்ளார்.