திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனருக்கு லஞ்சம் தர முயற்சி: மூவர் கைது.
நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ஒப்பந்ததாரராக உள்ள தனியார் நிறுவன இயக்குனர் அசோக் குமார் மற்றும் அவரது மேலாளர் சக்திவேல் உதவியாளர்கள் ஆனந்த் பாபு , முகமது உனீஷ், ஆகியோர் தனக்கு லஞ்சம் கொடுக்க வந்ததாக கூறி நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சுபம் தாக்கரே ஞான தேவ்ராவ் காவல்துறையிடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார்.
இதையடுத்து சக்திவேல் , ஆனந்தபாபு, முகமது உனீஸ் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் அசோக் குமார் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.