முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் பயணம் வென்றது போல தேர்தல் களத்தில் இந்தியாவின் வெற்றியும் அமையும் என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் சென்றிருந்தார். இன்று தமிழகம் திரும்பிய அவர் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “ஸ்பெயின் பயணம் வெற்றி பெற்றது போல இந்தியாவின் வெற்றி அமையும். மாற்று மதத்தினரிடம் வெறுப்பை விதைத்து, தேர்தல் லாபம் தேடும் அரசியல் ஸ்பெயினில் இல்லை. வேற்று மத மன்னர்களால் கட்டப்பட்ட கட்டிடத்தை ஆட்சியாளர்கள் இடித்து தகர்க்கவில்லை. இந்தியாவின் ஜனநாயகம் காக்கப்பட்டால் தான் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களின் வளர்ச்சி நிரந்தரம். நம்முடைய வரலாற்றை நாம் சொல்ல மறந்ததால் வரலாறு இல்லாத ஒரு கூட்டம் அதனை திரிக்கிறது. வதந்திகளை பரப்பியும், அவதூறுகளால் அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர். வரலாற்றை சிதைக்க நினைக்கும் வதந்தியாளர்களை வாக்குரிமையால் விரட்டி அடிப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.