மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பியதும், முதலமைச்சரை சந்திக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வரும் 12ம் தேதி சென்னை திரும்பும் கமல்ஹாசன் அடுத்த நாளே முதலமைச்சரை சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் 2 தொகுதிகளை கேட்பதாக தகவல் வெளியானாலும், இதுவரை அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறாத நிலையில், 12ம் தேதிக்கு பின் பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்புள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை 10 தொகுதிகள் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆறு தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிகிறது. எனவே அதில் கிடைக்கும் நான்கு தொகுதிகளில் இரண்டு தொகுதிகளை கமல்ஹாசனுக்கும் இரண்டு தொகுதிகளை திமுகவே கூடுதலாக போட்டியிடும் என்றும் கூறப்படுகிறது.