ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் ஜெயம் ரவி தற்போது நடித்து வருகிறார். இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நித்யா மேனனோடு ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படங்களுக்கு இடையில் ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷோடு “சைரன்” என்ற படத்திலும் நடித்து வருகிறார். சைரன் படத்தில் அனுபமா பரமேஸ்வரனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இத்திரைப்படத்தை அவரது மாமியார் சுஜாதா தயாரித்து வருகிறார். இந்த படத்தை ஆண்டனி பாக்கியராஜ் என்பவர் இயக்க இருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் டிரெயிலர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. படத்தின் ரிலீஸ் தேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 16ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடந்துள்ள பத்திரிக்கையாளர் சந்திப்பில் “சைரன் திரைப்படம் தந்தை மகளுக்கான இடையேயான பாசப்பிணைப்பான கதைக்களமாக உருவாகியுள்ளது. நடுவில் கொஞ்சம் வெட்டு குத்து படங்கள் என போய்விட்டேன். ஆனால் இப்போது திரும்பி வந்துவிட்டேன். இந்த படம் குடும்ப படமாக இருக்கும். ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் சிறப்பாக நடித்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.