ஹரியானா எல்லையில் மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்த விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாப், ஹரியானா உள்பட வட மாநிலங்களில் உள்ள விவசாயிகள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். டில்லி சலோ என்ற பேரணியை அவர்கள் டில்லியை நோக்கி நடத்திக் கொண்டிருந்தனர். டில்லி எல்லையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள் என்பதும் அதன் பிறகு நான்கு கட்ட பேச்சுவார்த்தை நடந்தது என்பதும் தெரிந்தது. பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து மீண்டும் டில்லி சலோ போராட்டத்தை விவசாயிகள் தொடங்கினர். தற்போது ஹரியானா எல்லையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகள் போராட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசு அமைத்துள்ள தடுப்புகளை தகர்த்தெறிய ஜேசிபி இயந்திரங்களுடன் விவசாயிகள் வந்த நிலையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.