விபத்தில் சிக்கிய மேயர் பிரியா கார்!
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக காயமின்றி தப்பினார். ஓட்டுநருக்கு மட்டும் லேசான உள்காயம்!
சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த மேயர் காரின் முன்னால் சென்ற கார், திடீரென திரும்பியதால் அதன் மீது மோதியது. இதனால் பின்னால் வந்த லாரி மேயர் பிரியா காரின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.