பாஜகவுக்கு இதுதான் கடைசி தேர்தலாக இருக்க வேண்டும்:
திமுக கூட்டணி அமோக வெற்றி பெற அயராது பாடுபட வேண்டும்.
திருச்சி திமுக பொதுக்கூட்டத்தில் சுப. வீரபாண்டியன் பேச்சு.
மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி திருச்சி மத்திய மாவட்டம் மேற்கு மாநகர திமுக சார்பில் திருச்சி உறையூரில் திமுக பொதுக்கூட்டம் மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான மு.அன்பழகன் தலைமையில் நடந்தது.
பகுதி செயலாளர் இளங்கோ வரவேற்றார். திராவிட இயக்க தமிழர் பேரவை செயலாளர் சுப.வீரபாண்டியன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தொகுதி உடன்பாட்டில் திமுக கூட்டணியிலும் இழுபறி இருக்கிறது பாஜக கூட்டணியிலும் இழுபறி இருக்கிறது என கூறுகிறார்கள். இழுபறி இருப்பது உண்மைதான். ஆனால் நம் கூட்டணி கட்சிகள் அதிகமான தொகுதிகள் கேட்பதால் இழுபறி இருக்கிறது. ஆனால் பாஜகவிலோ அதிகமான தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குகிறார்கள் ஆனால் கூட்டணி கட்சிகள் குறைவான தொகுதிகளிலேயே போட்டியிடுகிறோம் என்கிறார்கள். அதன் காரணமாக அவர்களிடம் இழுபறி இருக்கிறது. நம் கூட்டணி வெற்றி பெற போகிற காரணத்தால் அதிக எண்ணிக்கையில் கூட்டணி கட்சிகள் இடம் கேட்கிறார்கள். வெற்றி பெற போகும் கூட்டணியின் தொகுதி உடன்பாடு இழுபறிக்கும் தோல்வி அடையப்போகும் கூட்டணியின் தொகுதி உடன்பாடு இழுபறிக்கும் வேறுபாடு இருக்கிறது.
வட மாநிலங்களில் காவி கொடி சரிந்து வருகிறது. வரும் தேர்தல் பா.ஜ.க விற்கு கடைசி தேர்தலாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த தேர்தல் இந்தியாவிற்கே கடைசி தேர்தலாகிவிடும்.
ஜெயலலிதா இறந்து விட்டதாக நினைக்கிறோம் ஆனால் அவர் நிர்மலா சீத்தாராமன் வடிவில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
தி.மு.க விற்கு எதிரான இடத்தில் அ.தி.மு.க இருந்தாலும் தி.மு.க விற்கு அடுத்த இடத்தில் அ.தி.மு.க தான் இருக்க வேண்டும் அந்த இடத்தில் காவி கொடி வந்துவிட கூடாது. இலை மலராலாம் தாமரை மலரக்கூடாது. பல்வேறு திட்டங்களை தொடர்ந்து தி.மு.க அரசு செய்து வருகிறது. இதையெல்லாம் பார்த்த பின் யாருக்கு புளியை கரைக்கும் என்பது இரண்டு மாதங்களில் தெரிந்து விடும்.
பொதுக்கூட்டத்தில் கொடுத்த வடை உண்மையான வடை, மோடி சுட்ட வடை பொய்யான வடை. தென்னாட்டில் மட்டுமல்ல வட நாட்டிலும் பா.ஜ.க விற்கு எதிராக தான் மக்கள் இருக்கிறார்கள்.
பா.ஜ.க கூட்டணியில் இருப்பவர்கள் தங்கள் கட்சியில் லட்சக்கணக்கான தொண்டர்கள் இருப்பதாக கூறினார்கள் .ஆனால் திருச்சியில் நடந்த மாநாட்டில் அவர்கள் முன்னால் 60 பேர் தான் இருந்தார்கள். கருணாநிதி மறைவுக்கு பின் வெற்றிடம் வரும் என்றார்கள். ஆனால் இன்று ஸ்டாலின் கருணாநிதியை விட பல வெற்றிகளை பெற்று வருகிறார். இப்படி கூறுவது கலைஞரை சிறுமைப்படுத்துவது ஆகாது மாறாக இது தான் ஒரு இயக்கத்தின் வெற்றி. ஒரு தலைவர் விட்டுச் சென்றதை மற்றொரு தலைவர் பன்மடங்காக செய்து வருகிறார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி தான் வெற்றி பெறும் அதற்கு நாம் அனைவரும் உழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி,மாணவர் அணி ஆனந்த், மாவட்ட துணை செயலாளர் முத்து செல்வம், மாநகரத் துணைச் செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி, பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், ராம்குமார், நாகராஜன், கமால் முஸ்தபா, ஒன்றிய செயலாளர்கள் அந்தநல்லூர் கதிர்வேல், மாத்தூர் கருப்பையா, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம், துபேல்அகமது, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ், வட்டச் செயலாளர் புத்தூர் பவுல்ராஜ்,, மாவட்ட பிரதிநிதி வக்கீல் மணிவண்ண பாரதி,மண்டலக்குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, கவுன்சிலர்கள் கவிதா செல்வம், ராமதாஸ், புஷ்பராஜ் மற்றும் முன்னாள் கவுன்சிலர் திருநாவுக்கரசு அரவானூர் தர்மராஜன், வாமடம் சுரேஷ்,இன்ஜினியர் நித்தியானந்தம், வக்கீல் அந்தோணி, ஆர்.எஸ்.முருகானந்தம், சர்ச்சில், கிங் ,ஆனந்த், தென்னூர் அபூர்வா மணி, ராஜ்குமார், டாக்டர்கள் சுப்பையா, தமிழரசி உள்பட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர திமுக பொருளாளர் அன்பகம் முத்து பழனி நன்றி கூறினார்.