அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்ட  பாஜக பெண் நிர்வாகி விடுதலை.

Filed under: தமிழகம் |

அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்ட 
பாஜக பெண் நிர்வாகி விடுதலை.

அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாகவும்,பொது அமைதியை கெடுக்கும் விதமாக வீடியோ வெளியிட்டதாகவும் கூறி திருச்சியில் பாஜக பெண் நிர்வாகியை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
திமுக அரசு வருங்கால தலைமுறையினரின் எதிர்காலத்தை சிதைக்கும் கொடுமையை செய்து வருகிறது. மது கஞ்சா, தமிழகத்துக்கு சாபக்கேடு எனவும்,இவற்றைக் காணும்போது மனது வலிக்கிறது எனவும் பாஜக மாநில ஊடகப்பிரிவு செயலாளர் சென்னையில் வசித்து வரும் சௌதாமணி, சமூக வலைதளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அத்துடன் பள்ளி மாணவியர் (சிறுமிகள்) மது அருந்துவது போன்ற காட்சியும் இணைக்கப்பட்டிருந்தது. அவர் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாகவும்,பொது அமைதியை கெடுக்கும் விதமாக வீடியோ வெளியிட்டதாகவும் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருச்சி திமுக மத்திய மாவட்ட திமுக ஐடி பிரிவு செயலாளர் ஏகே. அருண், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதன்பேரில் திருச்சி மாவட்ட சைபர்கிரைம் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, சௌதாமினியை புதன்கிழமை கைது செய்து, திருச்சி மாவட்ட 5 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி பாலாஜி, அவரை சொந்த பிணையில் செல்ல அனுமதியளித்தார்.