தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் அவர்களுக்கு இயற்கை வள பாதுகாப்பு சங்கம் கோரிக்கை.
பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளி நேரங்களில் செல்லக்கூடிய கனரக கனிமவளவாகனங்களுக்கு காலை 8 மணி முதல் 10 மணி வரையும் மாலை 3.30 மணிலிருந்து 5 மணி வரையும் சாலையில் செல்ல தடை விதிக்க மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறையால் அறிவிப்பு பலகை தென்காசி -அம்பை சாலையில் பழைய குற்றாலம் விலக்கில் வைக்கப்பட்டுள்ளது..
ஆனால் அந்த அறிவிப்பு பலகையை தென்காசி மாவட்டம் முழுவதும் முக்கிய பகுதிகளில் வைப்பதற்கு தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இன்று வரை அந்த ஒரு பகுதியில் மட்டுமே இந்த அறிவிப்பானது ஒட்டப்பட்டுள்ளது. வேறு எந்த பகுதியிலும் இந்த அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை.முக்கியமாக இந்த கனிமவள வாகனங்களை ஓட்டுபவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கேரளாவை சார்ந்தவர்கள் அவர்களுக்கு தமிழ் புரிய வாய்ப்பில்லை அவர்களுக்கு புரியும் வண்ணம் மலையாளமும் இடம்பெற செய்ய வேண்டும் என்று இயற்கை வள பாதுகாப்பு சங்கம் சார்பாக கோரிக்கை வைத்துள்ளார்கள்.