ஈரோடு : கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே சில தனியார் பள்ளிகள் அடுத்த கல்வி ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை வசூலிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டி பாளையத்தில் நடமாடும் காய்கறி விற்பனை அங்காடியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர் சில தனியார் பள்ளிகள், ஊரடங்கின்போது கல்விக் கட்டணத்தை வசூலிப்பதாக எங்களுக்குத் தகவல் வருகிறது , தனியார் பள்ளிகள் தற்போது அடுத்த கல்வி ஆண்டுக்கான கட்டணம் வசூலிப்பது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.