இண்டி கூட்டணி குறித்து ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் விமர்சனம்!

Filed under: அரசியல்,இந்தியா,தமிழகம் |

ஆச்சாரியா பிரமோத் கிருஷ்ணம் என்பவர் அனைத்து திருடர்களும் ஒன்று கூடி உருவாக்கிய கூட்டணி தான் இண்டி கூட்டணி என தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இண்டி கூட்டணி பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், மோடியை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பித்த நிலையில் அக்கூட்டணிக்குள் பெரும் சர்ச்சை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சமீபத்தில் மம்தா பானர்ஜி தன்னிச்சையாக மேற்கு வங்க மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தார். காங்கிரஸ் கட்சியை அவர் ஒரு பொருட்டாக கண்டு கொள்ளவில்லை. மற்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு குறைவான தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும்தான் காங்கிரஸ் கட்சியை ஒரு கட்சியாகவே கூட்டணி கட்சியினால் மதிக்கின்றனர். காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஆச்சாரியா பிரமோத் கிருஷ்ணம், “அனைத்து திருடர்களும் ஒன்று கூடி ஒரு கூட்டணியை உருவாக்கினார். இருப்பினும் அவர்கள் தங்களுக்குள்ளையே ஒருவரை ஒருவர் முதுகில் குத்திக் கொண்டிருக்கின்றனர், காங்கிரஸ் கட்சியின் இந்த மோசமான நிலைக்கு காரணமான ஒரே நபர் ராகுல் காந்தி மட்டுமே. அவர் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் வரை அந்த கட்சியை காப்பாற்ற முடியாது” என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் காங்கிரஸ் கட்சியின் மீது கடும் குற்றச்சாட்டை வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.