சமீபத்தில் வெளியான “மஞ்சும்மாள் பாய்ஸ்” திரைப்படம் மலையாள திரை உலகின் முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் படங்கள் கூட செய்யாத அளவுக்கு 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான “மஞ்சும்மாள் பாய்ஸ்” படம் வசூல் சாதனை செய்துள்ளது மலையாள திரை உலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் “மஞ்சும்மாள் பாய்ஸ்” திரைப்படம் மலையாளத்தில் எவ்விதமான எதிர்பார்ப்புமின்றி வெளியானது. இத்திரைப்படம் கேரளாவில் சூப்பர் ஹிட்டானது. அது மட்டுமின்றி இத்திரைப்படத்தில் கமல்ஹாசனின் “குணா” படத்தின் சில காட்சிகள் மற்றும் பாடல்கள் இருந்தது. இதனால் இத்திரைப்படம் தமிழ்நாட்டில் பிரபலமானது. ஒரு கட்டத்தில் “மஞ்சும்மள் பாய்ஸ்” பட குழுவினர் கமல்ஹாசனை சந்தித்தனர்.இத்தகவல் வெளியானதால் பலரும் இத்திரைப்படத்தை பார்க்க ஆரம்பித்தனர். தமிழில் டப் செய்யாமல் மலையாளத்திலேயே வெளியான இந்த படத்தை இளைஞர்கள் மட்டும் இன்றி குடும்ப ஆடியன்ஸ்களும் கொண்டாடினர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் 150 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்டது. இன்று 200 கோடி ரூபாய் வசூல் செய்து இத்திரைப் பெரும் சாதனை படைத்துள்ளது. மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றது மட்டுமில்லாமல் மம்முட்டி, மோகன்லால் நடித்த படங்கள் கூட செய்யாத சாதனையை ஒரு சின்ன பட்ஜெட் படம் செய்து உள்ளது.