ரஜினிகாந்தை சந்தித்த பிரபல இயக்குநர்!

Filed under: சினிமா |

தெலுங்கு சினிமாவின் எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருக்கிறார் இயக்குனர் மகேஷ்பாபு பச்சிகொல்லா.

இவர் கடந்த 2014ம் ஆண்டு “ரா ரா கிருஷ்ணய்யா” தெலுங்கு படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்திற்கு அச்சு ராஜமணி இசையமைத்திருந்தார். இதையடுத்து, 2018ம் ஆண்டு ஹாலிவுட் அனிமேசன் படமாக நார்ம் ஆப் தி நார்த் கிஸ் டுதி கிங்டமின் கேமரா மற்றும் எலக்ட்ரிக்கல் துறையில் பணியாற்றினார். அதன் பின் கடந்த 2023ம் ஆண்டு மிஸ்டர் பாலிஷெட்டி என்ற படத்தை இயக்கினார். இயக்குனர் மகேஷ்பாபு பச்சிகொல்லா, இன்று தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்துள்ளார். இன்று, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரது 171வது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.