சமீபத்தில் வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தேர்தல் பிரச்சாரம் செய்த போது எல்லோரும் பளபளப்பாக பவுடர் பூசி இருக்கிறீர்கள், ஆயிரம் ரூபாய் வந்துவிட்டதா? என்று கேட்டது பெரும் சர்ச்சையானது. இது குறித்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் திமுகவின் திமிர் பேச்சு என்று பதிவிட்டுள்ளார்.
அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார். அவர் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். சமீபத்தில் அமைச்சர் உதயநிதி கூட கதிர் ஆனந்துக்கு வாக்கு சேகரித்தார். கதிர் ஆனந்த் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது “எல்லா பெண்களும் பவுடர் ஃபேரன் லவ்லி போட்டு பளபளப்பாக இருக்கிறீர்கள், ஆயிரம் ரூபாய் வந்து விட்டதா?” என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பல கண்டனம் தெரிவித்தனர். நடிகை கஸ்தூரி இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில், “திமுக திமிர் பேச்சுக்கள், ஓசி பஸ் make up, powder பளபள…. அடுத்தது loading ! பெண்களை ம(மி)திக்கும் திமுக” என்று பதிவிட்டுள்ளார்.