டில்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை காவலை, ஏப்ரல் 18ம் தேதிவரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டில்லி மாநில துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். இன்று மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 18ம் தேதி வரை நீட்டித்து டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக அவருக்கு வழங்கப்பட்ட நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில், இன்று மணீஷ் சிசோடியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து ஆம் ஆத்மியைக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அவ்வகையில் தற்போது டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையின் 2ம் எண் அறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர ராவின் மகள் கவிதா திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.