வேண்டாம் மோடி…!
வேண்டாம் மோடி…..!
தேனி பொது கூட்டதில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு.
தேனி லட்சுமிபுரம் அருகே திமுக சார்பில் நாடாளுமன்ற தொகுதியான தேனி மற்றும் திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
இதற்காக தேனி அருகே உள்ள லட்சுமிபுரத்தில் மாபெரும் பிரச்சார மேடைகள் அமைக்கப்பட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் சக்கரபாணி, மூர்த்தி, ஐ பெரியசாமி மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்
பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
மோடி மீண்டும் ஆட்சிக்கு வர கூடாது என்பதை பொதுமக்கள் மனதில் வைக்க வேண்டும். மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது. நாடாளுமன்றத்தில் விவாதம் இருக்காது மாநில அரசுக்கு அதிகாரம் இருக்காது முற்றிலும் ஒற்றை சர்வாதிகார நாடக மாற்றி விடுவார்கள் சமூக நீதியை சசீர்குலைத்து விடுவார்கள். வெளிநாடுகளில் டூர் சென்ற மோடி தற்போது உள்நாட்டில் டூர் சுற்றி வருகிறார்.
சென்னையில் மெட்ரோ 2 ஆம் கட்ட ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்காத காரணத்தினால் தான் தாமதம் ஆகிறது மதுரை aims போன்று சென்னை மெட்ரோ திட்டமும் அடிக்கல் நாட்டு மற்றும் நடைபெற்ற நின்று விடக்கூடாது. ஊழலுக்கு பல்கலைகழகம் கட்டினால் அதற்கு மோடி தான் வேந்தராக இருப்பார். 10 ஆண்டுகளாக இந்திய பிரதமராக இருந்து சாதனைகளை சொல்ல முடியாமல் மக்களை பிளவு படுத்தும் வேலையை செய்கிறார் என்று பேசியவர்,
பின்னர் “வேண்டாம் மோடி” “வேண்டாம் மோடி” என ஸ்டாலின் கூற தொண்டர்கள் மீண்டும் கூறினர்.
பின்னர் தொடர்ந்து பேசிய ஸ்டாலின் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் இந்தியா வளம்பெறும் குறிப்பாக தமிழகம் வளம்பெரும் என்று கூறினார். மகளிர் உரிமை தொகையால் கிராமப்புறங்களில் பண புழக்கம் அதிகரித்து உள்ளுர் வியாபாரம் பெருகி உள்ளது இது சமூக புரட்சி திட்டம், கடந்த முறை தேனி தொகுதியில் தவிர அனைத்து தொகுதியிலும் வெற்றி பெற்றோம் இந்த முறை தமிழகத்தில் தேனி தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களுடன் அதிமுக கூட்டணி வைத்திருந்தால் எடப்பாடி பழனிசாமி இரண்டு விஷயங்கள் தான் மத்திய அரசிடம் கேட்பார் ஒன்று திமுக ஆட்சி நடைபெற்றால் அதை கலைக்க சொல்வார்கள் அல்லது தங்கள் மீதான ஊழல் வழக்குகளை தள்ளுபடி செய்ய சொல்லுவார்கள்.
திமுக பிரதமர்களை, குடியரசு தலைவர்களை உருவாகின்ற இயக்கம். நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் நடைபெறும் என்று “இலவு காத்த கிளி போல்” இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி ஆனால் அது நடைபெறவில்லை அதனால் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.
அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் திமுக தான் வெற்றி பெற வேண்டும். அதிமுகவை அழிக்க வெளியில் இருந்து யாரும் வர தேவை இல்லை எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் போட்டி போட்டு கொண்டு செயல்படுகிறார்கள்
உண்மையில் விவசாயிகள் மீது பழனிச்சாமிக்கு அக்கறை இருந்தால் ஒன்றிய அரசுக்கு எதிராக போராடுகிற விவசாயிகள் பற்றி ஏன் பழனிச்சாமி பேசவில்லை மோடிக்கு எதிராக ஏன் குரல் கொடுக்கவில்லை. திமுக ஆட்சியில் தான் தனி விவசாயத்திற்கு தனி நிதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை திட்ட சட்டத்திற்கு அதிமுக, பாமக கட்சிகள் ஆதரிக்காமல் இருந்திருந்தால் அந்த சட்டம் நிறைவேறி இருக்காது இந்த இரண்டு கட்சிகளும் மக்களுக்கு துரோகங்கள் செய்த கட்சி. பாஜக உடன் சேர்ந்தால் தற்கொலைக்கு சமம் என்று கூறினார் டிடிவி தினகரன் நோட்டவோடு போட்டி போடுகின்றன கட்சி தான் பாஜக என்று சொன்னவர் இன்று அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார்.
மோடி வைத்திருக்கும் வாஷிங்க மெஷினில் ஊழல்வாதிகள் உள்ளே போய் வந்தால் சுத்தாமகி விடுவார்கள் அப்படி வந்தவர் தான் டிடிவி தினகரன் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சிக்கியவர தினகரன்.ஜெயலலிதா இருந்தவரை போயஸ் கார்டன் செல்ல தடை செய்யபட்டவர் தினகரன் இன்று சசிகலாவால் மீண்டும் கட்சிக்குள் நுழைந்து மோடியுடன் கூட்டணி வைத்துள்ளார்.தேனி மக்கள் கடந்த முறை ஓ பி ரவீந்திரநாத் இடம் ஏமாந்து விட்டீர்கள் இந்த முறை டிடிவி தினகரனிடம் ஏமாந்து விடாதீர்கள்.
பாஜக கட்சிக்கு தமிழகத்தில் சொந்த செல்வாக்கு இல்லாததால ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் போன்றவர்களை வாடகைக்கு எடுத்து தேர்தலில் நிற்க வைக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெல்ல வேண்டும் என்று பேசினார்.