மலையாள சினிமா கடந்த சில ஆண்டுகளாகவே ஹிட்டான படங்களை கொடுத்து வருகிறது. அங்கே நல்ல கதையம்சம் உள்ள படங்களும் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களில் வெளியான “பிரேமலு,” “பிரம்மயுகம்,” “மஞ்சும்மள் பாய்ஸ்,” “ஆடு ஜீவிதம்,” “வர்ஷங்களுக்கு ஷேஷம்“ மற்றும் “ஆவேஷம்” ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இந்த படங்கள் கேரளாவை தாண்டி பிற மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
அப்படி கடந்த மாதம் ரிலீசான பஹத் பாசில் நடித்த “ஆவேஷம்” திரைப்படம் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. வெளியாகி இரண்டாவது வாரத்தில் இந்த படம் திரையரங்குகள் மூலமாக 150 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது. நாளை இந்த படம் ஓடிடியில் ரிலீசாகவுள்ள நிலையில் கிட்டத்தட்ட தியேட்டர் வசூல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஹத் பாசிலின் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை ஆவேஷம் பெற்றுள்ளது.