சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு மாதமும் தமிழ் மாத முதல் ஐந்து நாட்கள் திறக்கப்படும். வைகாசி மாதம் பூஜைக்காக இன்று சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட இருப்பதாகவும் மே 19ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கோவில் நிர்வாகம் இன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகளுடன் நடை திறக்கப்பட்டது. 19ம் தேதி இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தினந்தோறும் காலை நெய் அபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகள் நடைபெறும். மேலும் வைகாசி மாத பூஜையுடன் 19ம் தேதி கோயில் பிரதிஷ்டை செய்த தினம் வருவதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் என்றும் அதனால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் சபரிமலை நடை திறப்பை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.