ஸ்டாலினை பாராட்டி மதுரையில் அழகிரி ஆதரவாளர் போஸ்டர்.
மக்களவைத்த் தேர்தலில் திமுக கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 வெற்றி பெற்ற நிலையில் மதுரையைச் சேர்ந்த அழகிரியின் ஆதரவாளர் ஒருவர் “இந்தியா 2024 டிஎன் சாம்பியன்ஷிப் டிஎம்கே” என்ற பெயரில் மதுரை மாநகர் முழுவதும் போஸ்டர் ஒட்டி உள்ளார்.
போஸ்டரில் “மேன் ஆஃப் தி சீரிஸ்” என்ற தலைப்பில் மு க ஸ்டாலினையும் “மேன் ஆப் தி மேட்ச்” என்ற பெயரில் உதயநிதி ஸ்டாலினையும் குறிப்பிட்டுள்ளார்.