கள்ளச்சாராயம் அருந்தியதால் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் தப்பியோடினார். அவர் தற்போது உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேஷசமுத்திரத்தை சேர்ந்த சுப்பிரமணி நேற்று தப்பியோடினார். அவரை தேடி கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் இருந்தனர். இன்று அவர் உயிரிழந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒருவர் திடீர் என நேற்று தலைமறைவானார். தலைமறைவானதற்கு என்ன காரணம்? சிகிச்சையில் இருந்த அவர் திடீரென ஏன் மருத்துவமனை விட்டு யாருக்கும் தெரியாமல் ஏன் வெளியேறினார் என பல கேள்விகள் எழுந்துள்ளது.