“தி கோட்” திரைப்படம் விஜய் நடிப்பில் மிகப்பெரிய அளவில் உருவாகி வருவதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்க வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இத்திரைப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அந்த மூன்று வேடங்களுக்கும் மூன்று கெட்டப்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் நடந்துவருகிறது. படத்தின் அனைத்து மொழிகளுக்குமான சேட்டிலைட் உரிமையை ஜி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதே போல இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக சொல்லப்பட்டது. போஸ்டரிலும் நெட்பிளிக்ஸ் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் கோட் படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கவில்லையாம். படம் முழுவதையும் பார்த்துவிட்டுதான் அதன் விலையை முடிவு செய்வோம் என அதிரடியாக அறிவித்து விட்டதாம். இதுவரை வாய் வார்த்தை மூலமான வியாபாரம் மட்டுமே நடந்துள்ளதாம்.