“இந்தியன் 2” திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா?

Filed under: சினிமா |

இன்று நீதிமன்றம் கமல்ஹாசன் நடித்த “இந்தியன் 2” திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.


ராஜேந்திரன் என்பவர் “இந்தியன்” படம் உருவாக்கும் போது கமல்ஹாசனுக்கு வர்மக்கலையை கற்றுக் கொடுத்தார் என்றும் அதற்காக அவரது பெயரும் அப்படத்தின் டைட்டிலில் இடம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ராஜேந்திரன் கற்றுக்கொடுத்த வர்மக்கலையை “இந்தியன் 2” படத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக தன்னிடம் அனுமதி வாங்கவில்லை என்று ராஜேந்திரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது கமல்ஹாசன் தரப்பிலும் சுபாஷ்கரன் தரப்பிலும் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து சுபாஸ்கரன், கமல்ஹாசன் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை என்றால் அவர்கள் தரப்பு வாதத்தை கேட்காமலேயே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் “இந்தியன் 2” திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.