மீண்டும் 13 தமிழக மீனவர்கள் கைது

Filed under: அரசியல்,தமிழகம் |

அடிக்கடி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். தற்போது மீண்டும் 13 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர்.

பல ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர் கதையாக இருக்கிறது. இதற்கு மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தும் கைது நடவடிக்கை தொடர்ந்து கொண்டே உள்ளது. தமிழக முதலமைச்சர் பலமுறை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்குகடிதம் எழுதியுள்ளார். நேரில் சந்தித்தபோது கூட இது குறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் நேற்று நடந்த நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டு இருந்தார்கள். அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர். அது மட்டும் இன்றி மூன்று விசை படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் விசாரணைக்காக காங்கேசன் கடற்கரை முகாமுக்கு அழைத்துச் சென்று உள்ளதாகவும் கூறப்படுகிறது.