இன்று நடிகர் தனுஷ் நடித்து இயக்கிய ‘ராயன்’ திரைப்படத்தின் டிரெயிலர் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோவில் ஆரம்பத்தில் செல்வராகவன், “காட்டிலேயே ஆபத்தான மிருகம் ஓநாய் தான். சிங்கம் புலி எல்லாம் வலிமையான மிருகம், ஆனால் ஓநாய் மட்டுமே ஆபத்தான மிருகம். ஒத்தைக்கு ஒத்தையாக நின்றால் சிங்கம் ஓநாயை அடித்து விடும், ஆனால் ஓநாய் ஸ்கெட்ச் போட்டால் இந்த சிங்கத்தை வீழ்த்தி விடும்” என்று வசனம் பேசி உள்ளார். அடுத்து தனுஷின் அதிரடி ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றிருக்கும் இந்த டிரெயிலர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷின் ஆக்ரோஷமான வசனம், நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யாவின் ஆவேசமான வில்லத்தனம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிப்பு ஆகியவை இந்த டிரெயிலர்கள் இருப்பதை எடுத்து இந்த டிரெயிலர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தனுஷ், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தனுஷின் 50வது படம்.