600 காலியிடங்களுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தில் ஆட்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பணிக்காக 25 ஆயிரம் பேர் குவிந்தனர்.
குஜராத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 10 பணியிடங்களுக்கு 1,800 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். ஒரே நேரத்தில் அனைவரும் வருகை தந்து முண்டியடித்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி வேலையில்லா திண்டாட்டத்தில் நிலைமையை வெளிச்சம் போட்டு காட்டியது. தற்போது மும்பையில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தில் 600 பணியிடங்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இந்த பணிக்காக 25 ஆயிரம் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் சரக்குகளை ஏற்றி இறக்கும் வேலைக்காக ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பத்துடன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய ஏர் இந்தியா ஊழியர்கள் அவர்களிடம் விண்ணப்பங்களை மட்டும் பெற்றுக் கொண்டு ஈமெயில் மூலம் பதில் அனுப்புவதாக திருப்பி அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் வேலை இல்லாமல் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை மேற்கண்ட இரண்டு சம்பவங்கள் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது