கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் கார்த்தி நடித்து வரும் ‘சர்தார்-2’படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. படத்தின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டதால் ஒருவர் உயிரிழந்ததாக செய்தி வெளிவந்துள்ளது.
பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கார்த்திக் நடிப்பில் உருவான சர்தார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. திடீரென இன்று நடந்த சண்டைக் காட்சி படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் ஏழுமலை என்பவர் பணிபுரிந்ததாக கூறப்படுகிறது. சண்டைக்காட்சியின் படப்பிடிப்பின் போது ஏழுமலை என்ற சண்டை பயிற்சியாளர் 20 அடி உயரத்திலிருந்து குதித்ததாகவும் அப்போது அவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவரது நுரையீரலில் இரத்த கசிவு ஏற்பட்டதால் சிகிச்சையின் பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளன. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.