வாழை படத்தைப் பார்த்து அழுத பாலா!

Filed under: சினிமா |

‘வாழை’ என்ற படத்தை தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் கலையரசன், நிக்கிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, மாரி செல்வராஜ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்துள்ளார். படம் ஆகஸ்ட் 23ம் தேதி ரிலீசாகிறது.

சமீபத்தில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெயிலர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பலர் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர். அவ்வகையில் படத்தை நேற்றுப் பார்த்த இயக்குனர் பாலா அழுதபடியே வெளியே வந்து இயக்குனர் மாரி செல்வராஜைக் கட்டியணைத்து தனது பாராட்டைத் தெரிவித்தார். இது சம்மந்தமான வீடியோக் காட்சியை இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர அது இப்போது வைரலாகி உள்ளது.