ஒஸ்தி’ படத்தில் சிம்பு, மயக்கம் என்ன படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து பெயரெடுத்தவர் ரிச்சா கங்கோபாத்யா. இருவர் பற்றியும் ரிச்சா கூறும்போது, “தனுஷ், சிம்பு இருவரின் பெர்சனாலிட்டி வேறு, வேறு. ஆனால் நடிப்புத்திறமையும் இசையறிவும் இருவருக்குமே அதிகம். பல விஷயங்களிலிருந்து நான் கற்றுக்கொண்டேன். இருவருடன் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கும்” என்றார் ரிச்சா.