கொரோன வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு மாநிலங்களில் அதிகமாக பரவி உள்ளது. தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்நிலையில் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் பற்றி மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதில் கொரோனா இல்லாத இடங்களில் அரசுப் பேருந்துகள், டாக்ஸி, ஆட்டோ போன்றவை அனுமதி கொடுத்துள்ளது.
இதன் மூலம் உள்ளுர் ரயில்கள் மாநிலங்களுக்குள் இயங்கலாம். இதனிடையே மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு கேரளா போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு கர்நாடகாவில் நுழைய தடை விதிக்கப்படுகிறது என உத்தரவுவிதித்துள்ளார். பின்பு ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். மேலும் பல தளர்வுகளை பற்றி முதல்வர் எடியூரப்பா வெளியிட்டார்.