கன்னியாகுமரி, ஜூன் 1
கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் அருகே உள்ளது திருவரம்பு என்ற ஊர். இந்த ஊரைச் சேர்ந்தவர்தான் சதீஸ்குமார், அதேபோல் ராபிமோகன் மற்றும் அவரது அண்ணன் ராபர்ட் நிர்மல்சிங் ஆகியோரும் இதே ஊரை சேர்ந்தவர்கள் தான். இவர்கள் இருவருடன் சதிஷ்குமார் நல்ல நெருக்கமாக பழகியிருக்கிறார். ஒரு கட்டத்தில் இவர்களுக்குள் பிரச்சனை வர அது கோர்ட் கேஷ் என்று பெரிய அளவில் போய் இப்பொழுது பெரிய மன உளச்சலுக்கு ஆளாகியுள்ளார் சதிஸ்குமார்.
நம்மிடம் கண் கலங்கியபடியே பேசிய சதீஸ்குமார், சார் ‘’ ஒரே ஊர், ஒரே சாதி, என்பதால் தான் அவர்கள் இருவரிடமும் ரொம்ப நெருங்கி பழகினேன். நான் கட்டுமானம், தொண்டு நிறுவனம், ஜவுளி என பல தொழில் செய்து வருகிறேன். எனவே அழகியமண்டபம் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் நான் பிரபலமாக உள்ளேன். நண்பர் என்று பழகி நயவஞ்சகமாக என்னை ஏமாற்றி விட்டனர் சகோதரர்கள் ராபிமோகனும் ராபர்ட் நிர்மல் சிங்கும் இனி யாரிடம் பழகினாலும் நண்பன் என்று நினைக்காது அளவிற்கு பண்ணிவிட்டார்கள்.
ராபி மோகன் மற்றும் அவரது சகோதரர் ராபர்ட் நிர்மல் சிங் ஆகியோர் சென்னையில் படக்கம்பெனி நடத்துகிறோம் பணம் நிறைய போட்டு பட பிஸ்னஸ் பண்ணுகிறோம் என்றார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் அடிக்கடி நாங்கள் சந்தித்து கொண்டோம். எனது நண்பர் என்ற முறையில் எனது கார் ஓட்டுனர் சாம்ராஜ்ம் அவர்களுடன் பழகினான். ஒரு கட்டத்தில் ராபிமோகன் பிஸினஸில் தானும் இணைந்து செயல்பட போவதாக சொல்லி சாம்ராஜ் ராபிமோகனுடன் சென்று விட்டார்.
இப்படி இருக்க ஒரு நாள் திடீரென எனக்கு அழுதபடியே போன் பண்ணிய சாம்ராஜ். என்னை காப்பாற்று நான் சிக்கலில் மாட்டிக்கொண்டேன் என்று சொல்ல, எனக்கு எதுவும் புரியவில்லை உடனே நான் ராபி மோகனை தொடர்பு கொண்டு என்ன ஏது என்று கேட்டேன். அப்போது மாலை வாருங்கள் பேசிக் கொள்ளலாம் என்றான் . மாலையில் ராபிமோகன் என்னை சந்தித்தார். அப்போதுதான் சாம்ராஜ் தன்னிடம் கோடி ருபாய்க்கும் மேல் ஏமாற்றி விட்டதாக கூறினான். நான் சேட் ஒருவரிடம் தான் வாங்கி கொடுத்தேன். இப்பொழுது நான் அந்த சேட்டிடம் வாங்கிய பணத்தைக் கட்டியாக வேண்டும் எனவே தற்சமயம் பிரச்சனைத் தீரவேண்டும் என்றால் நீ உன் வங்கி காசோலையை தர வேண்டும் பிரச்சனைத் தீர்ந்ததும் காசோலையை மீட்டு தருகிறோம் என்றான்.
இல்லையெனில் சாம்ராஜை கதி அதோ கதிதான். சாம்ராஜை சேட்டுடன் விட்டு விடுவது தான் வழி அவர் பணத்தை அவனிடம் வாங்கிக் கொள்வார் அல்லது சாம்ராஜ் சாவட்டும் என ஆவேசமாக ராபி மோகன் பேசினான். ஒரு கட்டத்தில் என்னை மிரட்டவும் ஆரம்பித்தான். நான் உடனே சாம்ராஜின் மீதுள்ள அன்பால் காசோலையைக் கொடுத்தேன் ஆனால் ஒரு காசோலை பத்தாது என்று சொல்லி பல வங்கி காசோலைகளையும் பறித்துக் கொண்டான். நான் கட்டுமான தொழிலுக்காகவும், தொண்டு நிறுவன செலவுக்காகவும் எப்போதுமே காசோலையில் கையொப்பம் போட்டு வைத்திருப்பது வழக்கம். அந்த காசோலைகளை அவன் கேட்கும் போது எல்லாம் கொடுத்து வந்தேன். ஒரு கட்டத்தில் என்னிடம் பிணையமாக என்று கூறி பெறப்பட்ட காசோலைகளை பேங்கிற்கு அனுப்பி பணம் பெற முயற்சித்தனர். ஆனால் பணம் பெற முடியவில்லை. உடனே என் பெயரிலும் எனது மனைவி பெயரிலும் நாகர்கோவில் குற்றபிரிவில் புகார் மனு கொடுத்தார்கள்.
காவல் துறையினரும் என்னையும் என் மனைவியையும் அழைத்தார்கள் நான் உடனே ஒரு வழக்கறிஞரோடு காவல் நிலையம் சென்றேன். அப்போதும் ராபி மோகன் அவரது அண்ணன் ராபர்ட் நிர்மல் சிங்கும் எனது வழக்கறிஞரிடம் ஏதோ பேசுவது போல் பேசி எனது வழக்கறிஞரையே, விலைக்கு வாங்கியே விட்டார்கள். என் மீது சுமத்தப்பட்ட புகாரின்படி இன்னமும் சில நாளில் பணம் கொடுப்பதாய் நான் வாக்களித்தது போல் எழுதி கையொப்பம் வாங்கும் போது தான் இந்த விபரம் தெரிந்தது. இப்படியும் நடக்குமா? என நான் புலம்பி விட்டு வந்தேன்.
பின்னர் நீதி மன்றத்தை அணுகினேன் குறிப்பாக குற்ற எண் 38/ 2018ல் இவ்வழக்கு பதிவாகி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் Cri.0.P(MD) no : 861/2019 ல் “ஸ்குவாஸ்” மனு தாக்கல் செய்து 20 19-ல் முதல் மாதமே பொய் வழக்கு என உறுதியாக்கி மேற்படி வழக்கிற்கு தடையுத்தரவும் பிறப்பித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
இதற்கு இடைப்பட்ட நாளில் காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டு நாளிதழ், சமூக வலைதளம் மற்றும் தொலைக்காட்சியில் “நிறுவன தலைவர் பல கோடி மோசடி” என தலைப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டு என் நற்புகழைக் கெடுத்தனர். இதன் விளைவாக பாரத வங்கியின் கலெக்சன் ஏஜெண்டுகள் மூலம் கடற்கறை கிராமத்து மக்களுக்கு நான் தொண்டு நிறுவனம் மூலம் வாங்கிக் கொடுத்த பணம் பிரிக்க முடியாமல் போனது. உடனே அந்த வங்கி கிளையின் மேலாளரே ஒவ்வொரு வீடாக சொல்லியும் தொடர்பு கொண்டும் வங்கியில் செலுத்தப்பட்ட பண விவரங்களை கூறியும், வங்கி வாங்கிய கடன் தொகையை குறிப்பிட்ட தேதியில் கட்ட சொல்லியதால் தான் பொது மக்களிடம் நம்பக தன்மை ஏற்பட்டது. அதன் பின்பும் என் மீது ராபி மோகனின் சகோதரர் ராபர்ட் நிர்மல் சிங் சென்னைக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வழக்கும் பதிவு செய்தார்கள். அதுவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் “ஸ்குவாஸ்” மனு தாக்கல் செய்து இவ்வழக்கிற்கு இறுதி அறிக்கை தாக்கல் செய்யக் கூடாது என காவல்துறைக்கு நீதிமன்ற தடை ஆணையும் எனக்கு சாதகமாக வழங்கி ஆணைப் பிறப்பித்தார்கள்’
இப்படி வழக்கு மேல் பொய் வழக்காக போட்டாலும் அதிலெல்லாம் மீண்டு வந்த பொழுது, எனது காசோலையில் சிலவற்றை திருவட்டார் பகுதியில் சிலருக்கு கொடுத்து எனது வங்கி கணக்கில் பணம் மோசடி செய்ய ராபிமோகன் முயற்சித்தான் பணம் எடுக்க முடியாததால், அந்த நபர்களைக் கொண்டே என் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் தொடுத்து வருகின்றனர். அதையும் நான் சட்ட படி எதிர்கொள்வேன் என்றவர்
இந்த சமயத்தில் ராபி மோகன் புகாரின் பேரில் நாகர்கோவில் குற்ற பிரிவு காவல் நிலையத்தில் என் மீது பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கு 38/ 2018 காவல்துறை சார்பில் பொய் வழக்கு என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு அந்த வழக்கும் தள்ளுபடியானது. என பேசி முடித்தார் சதீஸ்குமார் .
இப்பிரச்சனை தொடர்பாக ராபிமோகன் மற்றும் அவரது சகோதரரான ராபர்ட் நிர்மல்சிங் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்க முயற்சி செய்தோம் முடியவில்லை.
கூடா நட்பு கேடாய் முடியும் என்ற வாசகத்திற்கு ஏற்ப நடந்த மேற்கண்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் சின்ன அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.