K13, விக்ரம் வேதா, இவன் தந்திரன், நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் நடித்தவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தற்போது சக்கர, மாறா போன்ற படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ஒரு பேட்டியில் பேசிய ஸ்ரத்தா ஸ்ரீநாத் கூறியது: சினிமா துறையில் ஆண்களின் செயல்பாடு அதிகம் இருக்கும் போது நயன்தாரா, சம்ந்தா போன்ற பல நடிகைகள் சிறப்பாக நடித்து உட்சத்தில் இருக்கின்றனர். நானும் அவர்களை போலவே சிறப்பாக நடித்து உயர விரும்புகிறேன். நான் நிஜ வாழ்க்கையில் மிக தைரியமான பெண்.
இதனால் நான் மது குடிப்பேன் மற்றும் புகைப்பிடிப்பேன் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். பெற்றோர்கள் பார்த்து நிச்சயம் செய்யும் திருமணங்கள் கூட சில நேரங்களில் தோல்வி அடைகிறது. இதனால் நான் காதல் திருமணம் தான் செய்து கொள்வேன்.
நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். தற்போது எவரையும் காதல் செய்யவில்லை.
இவ்வாறு ஸ்ரத்தா ஸ்ரீநாத் கூறியுள்ளார்.