உதயநிதி ஸ்டாலின் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் உயநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு பளார் விட்ட நீதிபதி!!

Filed under: அரசியல்,தமிழகம் |

உதயநிதி ஸ்டாலின் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் உயநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு பளார் விட்ட நீதிபதி!!

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது அதிமுகவை சேர்ந்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உதயநிதி அரசியலுக்கு பளார் என உரைக்கும் படி அமைந்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் தனது தந்தையை முதல்வராக மாற்றவேண்டும் என்று தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்,பிரச்சாரங்களுக்கு நடுவே ஆதாரமற்ற பல பொய்களையும் கூறிவருவதுடன் ஆபாசமாக பேசுவதையும் தொழிலாக கொண்டுள்ளார், பிரதமர் மோடி தொடங்கி, சமீபத்தில் சசிகலா வரை அனைவரையும் இரட்டை அர்த்தத்தில் அவதூறுகளை பரப்பி வந்திருக்கிறார்.

அதே போன்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குறித்தும் அவரது மகன் குறித்தும் பாலியல் வழக்கில் தொடர்பு இருப்பதாக தெரிவித்து பேசியிருந்தார் இதையடுத்து பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது, வழக்கின் விசாரணை முடிவில் நீதிமன்றம் கடுமையாக உதயநிதியை எச்சரித்துள்ளது.

எந்தவித ஆதாரமும் இன்றி எப்படி ஒருவரால் அவதூறு பேசமுடிகிறது, சிபிஐ தரப்பு பொள்ளாச்சி ஜெயராமனையோ அவரது மகன் மீது எந்தவித விசாரணையும் மேற்கொள்ளாத நிலையில் ஏன் அவதூறு பரப்புகிறீர்கள், என கேள்வி எழுப்பினார் அதற்கு உதயநிதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இனி உதயநிதி பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து அவதூறுகளை பரப்ப மாட்டார் என அவரது சார்பில் மன்னிப்பு கேட்டார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி இறுதியில் ஒழுங்கா பேச முதலில் உதயநிதிக்கு கற்றுக்கொடுங்கள் என என அறிவுரையும் கொடுத்துள்ளார், இந்த நிலையில் அவதூறு பரப்பிய உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்ட சம்பவம் அரங்கேறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் உதயநிதியின் தரத்தை வெளிப்படுத்தியுள்ளது.