நாகர்கோயில் வந்தடைந்தார் அமித்ஷா! பொன்னாருக்காக பரப்புரை!

Filed under: அரசியல் |

நாகர்கோயில் வந்தடைந்தார் அமித்ஷா! பொன்னாருக்காக பரப்புரை!

தமிழகத்திற்கு ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து தேசிய கட்சி தலைவர்கள் கடந்த சில நாட்களாக தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியை பார்த்து வருகிறோம்

ஏற்கனவே பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராகுல் காந்தி உள்பட பலர் தமிழகத்திற்கு வந்திருந்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மீண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார்


சற்றுமுன் அவர் நாகர்கோவில் வந்துள்ளதை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் அவர் கன்னியாகுமரி தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்ய உள்ளார். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தொகுதியில் பாஜக வேட்பாளராக பொன் ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க தமிழகம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது