திருச்சி பொன்மலைப்பட்டியில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட மலரும் சந்திப்பு நினைவுகள் நிகழ்ச்சி நடைபெற்றது.

Filed under: தமிழகம் |

திருச்சி பொன்மலைப்பட்டியில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட மலரும் சந்திப்பு நினைவுகள் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு சிறப்பு போலீஸ் முதல் அணியில் 1981, 1982 வது ஆண்டு பணியில் சேர்ந்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகளின் மூன்றாம் ஆண்டு மலரும் நினைவுகள் சந்திப்பு நிகழ்ச்சி பொன்மலைப்பட்டி மலையடிவாரம் தனியார் திருமண மண்டபத்தில் பிப்ரவரி 14ம் தேதி புதன்கிழமையான இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி, மதுரை, சென்னை, கோயம்புத்தூர், விழுப்புரம், கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அவர்களின் பழைய கால காவல்துறையில் பணியாற்றிய போது நடந்த நிகழ்வுகளை மலரும் நினைவுகளாக பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வில் வந்திருந்த அனைத்து ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு முன்னதாக மறைந்த 20 ஓய்வு பெற்ற போலீசாருக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக 46 வது வார்டு கவுன்சிலர் கொட்டப்பட்டு ரமேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்

ஒருங்கிணைப்பாளர்களாக ராஜு, ரவி, முத்துச்சாமி, பொன்மலை இளங்கோவன், ஸ்ரீரங்கம் இளங்கோவன், வேதமூர்த்தி, பாஸ்கர், சந்திரன், தியாகராஜன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் அவரது குடும்பத்தார்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.