12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
தேனி மாவட்டம் சின்னமனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டவரான முத்துப்பாண்டி (வயது 35) என்ற இளைஞரின் உறவுக்காரர் வீட்டில் கடந்த 16.03.2022 அன்று தனியாக இருந்த 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு பின் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவுற்று சாட்சியங்களின் அடிப்படையில் முத்துப்பாண்டி என்ற இளைஞர் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் 5000 ரூபாய் அபராதம் அதைக் கட்ட தவறினால் மேலும் ஓராண்டு மெய்க்காவல் சிறை தண்டனையும் விதித்து தேனி போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கணேசன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அந்தத் தீர்ப்பை தொடர்ந்து குற்றவாளி யான முத்துப்பாண்டியை சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.