ஆவின் டீமேட் ரக பால் பாக்கெட்டுகள் விரைவில் கெட்டுப் போவதாக குற்றச்சாட்டு.
மதுரை ஆவின் பால் பண்ணையில் இருந்து விநியோகம் செய்யப்படும் டீமேட் ரக பால் பாக்கெட்டுகள் விரைவில் கெட்டுப் போவதாக பழங்காநத்தம், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.
அதனால், வியாபாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் கூறினர்.
“கோடை வெயிலின் தாக்கத்தால் பால் பாக்கெட்டுகள் விரைவில் கெட்டுப் போகிறது” என்று ஆவின் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.