போலி பத்திரம் மூலம் ஆதி திராவிட நலத்துறைக்கு சொந்தமான இடத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு.
தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியம், கீழக்கடையம் புதுக்காலனியைச் சேர்ந்த தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடையம் ஒன்றியம், கீழக்கடையம் பகுதி 1 கிராமம் சர்வே எண் 197-27ல் எங்கள் பகுதி மக்கள் 25க்கும் மேற்பட்டேர்ருக்கு ஆதி திராவிட நலத்துறை மூலம் பட்டா வழங்கப்பட்டது. இந்த இடத்தில் வீடுகள் ஏதும் இல்லை. காலி மனையாக உள்ளது.
இந்நிலையில் இந்த இடத்தை அபகரிக்க வேண்டும் என்ற தீய எண்ணத்தில் வீடு இல்லாத இடத்தில், கீழகடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் மூலம் வீட்டு தீர்வைப்போட்டு, கஜேந்திரன், பெருமாள், கண்மணி மாவீரன் ஆகியோர் போலி பத்திரம் பதிவு செய்துள்ளனர். எனவே ஆதி திராவிட நலத்துறைக்கு சொந்தமான இடத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம். என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.