லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய ஆண்டிபட்டி வட்டாட்சியர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் வட்டாட்சியர் ஒரு லட்சம் லஞ்சமாக பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை அவரை கைது செய்துள்ளனர்.
இதையடுத்து அவருக்கு உடல் நல குறைபாடு காரணமாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.