ஊரைவிட்டு மூன்று குடும்பங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டதால் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் காரை முற்றுகையிட்டு உறவினர்கள் தர்ணா.

Filed under: தமிழகம் |

ஊரைவிட்டு மூன்று குடும்பங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டதால் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் காரை முற்றுகையிட்டு உறவினர்கள் தர்ணா.

தேனி மாவட்டம், போடி தாலுகா, மாணிக்காபுரம் கிராமத்தில் மூன்று குடும்பங்களை ஒதுக்கி வைக்கப்பட்டதால்மாவட்ட ஆட்சித் தலைவர் காரை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாணிக்காபுரம் கிராமத்தில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த 66 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாணிக்காபுரம் கிராமத்தில் பழனி மகன்கள், சதீஸ்குமார், கார்த்திக் உள்ளிட்ட மூன்று பேரின் குடும்பங்களை ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

குறிப்பாக பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்க கூடாது, தெருவில் நடக்கக்கூடாது, கோவிலில் வழிபாடு செய்ய கூடாது, சுடுகாட்டை பயன்படுத்தக் கூடாது, ஊரில் உள்ள யாரும் இந்த மூன்று பேரின் குடும்பத்துடன் தொடர்பு வைக்கக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இன்று மூன்று பேரின் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா காரை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் 3 பேரின் குடும்பத்தினரை சேர்ந்த உறவினர்கள் ஈடுபட்டனர்.

இதனால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.