ஆதி நாராயணனை கொலை செய்ய முயற்சி.
மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதி நாராயணனை கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை அருகே அவரது கார் மீது மர்மநபர்கள் மற்றொரு காரை மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன் அவர் மீது பெட்ரோல் குண்டு வீசியும் தாக்கியுள்ளனர் அதிலிருந்து ஆதிநாராயணன் தப்பிய நிலையில் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்..