கோவை ஏப்ரல், 21 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை ரேபிட் சோதனை கருவி மூலம் நடத்தப்பட்டது, இந்த முகாமில் நெற்றிக்கண் வார இதழ் கோவை மாவட்ட தலைமை நிருபர் வே. மாரீஸ்வரன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு தங்கள் ரத்த மாதிரிகளை வழங்கி கொரோனா பாதிப்பு குறித்து சோதனை செய்து கொண்டனர். முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி சோதனை குறித்து சுகாதாரத் துறையினரிடம் […]
Continue reading …புது டெல்லி, ஏப்ரல், 20 மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சொலிஹ் உடன், பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார். தங்களது நாடுகளில் தற்போதைய கொவிட்-19 பாதிப்பு நிலைமைகளைப் பற்றி இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறிக்கொண்டனர். சார்க் நாடுகளுக்கிடையே ஒத்துக்கொள்ளப்பட்ட ஒருங்கிணைப்பு முறைகள் நன்றாக அமல்படுத்தப்படுத்தப்படுவதாக அவர்கள் திருப்தி தெரிவித்தனர். மாலத்தீவுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட இந்திய மருத்துவக் குழுவும், இந்தியாவால் அன்பளிப்பாக அளிக்கப்பட்ட அத்தியாவசிய மருந்துகளும், தீவுகளில் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பங்காற்றியதை அறிந்து பிரதமர் மகிழ்ச்சி அடைந்தார். மாலத்தீவைப் போன்ற சுற்றுலாவை சார்ந்த பொருளாதாரத்துக்கு பெரும் தொற்று விடுத்துள்ள கடினமான சவால்களைப் பற்றி பேசிய பிரதமர், கொவிட்-19இன் சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்பை குறைக்க இந்தியாவின் ஆதரவு தொடருமென மாலத்தீவு அதிபருக்கு உறுதி அளித்தர். தற்போதைய சுகாதார சிக்கல்களால் ஏற்படும் பிரச்சினைகள் […]
Continue reading …புதுடெல்லி : உலக சுகாதார அமைப்பின் (WHO) மூத்த அதிகாரிகள் மற்றும் கள அலுவலர்களுடனும், மத்திய மாநில அரசுகளின் சுகாதார அலுவலர்களுடனும், கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து, காணொளிக் காட்சி மூலம் மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் இன்று கலந்துரையாடினார். உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகளுக்குப் பாராட்டு தெரிவித்த டாக்டர் ஹர்ஷ் வர்த்தன், நெருக்கடியான காலக்கட்டத்தை நாம் சந்தித்திருக்கிறோம். போலியோ மற்றும் தட்டம்மையை ஒழித்ததைப் போல இந்த […]
Continue reading …சென்னை : தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால், பரிசோதனை மையங்களையும், சோதனை எண்ணிக்கையையும் அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் வீரியம் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், தமிழகத்தில் இந்நோயால் பாதிக்கப்பட்ட 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதும், எந்தவித அறிகுறியும் இல்லாமல் திடீரென கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் அதிக அளவில் இருப்பதும் மிகுந்த கவலை அளிக்கிறது. நோய்ப் பரவலைத் தடுக்க ஊரடங்கிற்கு எந்தளவுக்கு […]
Continue reading …வே. மாரீஸ்வரன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 119 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் கோவையில் கொரோனா வால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கோவை மாநகராட்சி பகுதியில் வசிப்பவர்கள் 17 பேர், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையைச் சேர்ந்த இரண்டு பேர், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியைச் சேர்ந்த […]
Continue reading …