Home » Entries posted by Shankar U (Page 114)
Entries posted by Shankar

தங்கம் தென்னரசு மீது இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

Comments Off on தங்கம் தென்னரசு மீது இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

நேற்று அமைச்சர் ஐ பெரியசாமி குறித்த வழக்கின் தீர்ப்பு அதிரடியாக வெளியானது. அடுத்த கட்டமாக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவியை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து எடுத்துக் கொண்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது அமைச்சர் தங்கம் தென்னரசு மனைவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏற்கனவே தனது வாதத்தை முன்வைத்துவிட்டார். இன்று இவ்வழக்கில் அரசு தரப்பு வாதம் தொடர உள்ளதாகவும் […]

Continue reading …

ப்ளு சட்ட மாறனின் “ஆண்ட்டி இந்தியன்” திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்!

Comments Off on ப்ளு சட்ட மாறனின் “ஆண்ட்டி இந்தியன்” திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்!

ப்ளூசட்டை மாறன் தியேட்டர்களில் ரிலீசாகும் திரைப்படங்களை யூட்யூபில் விமர்சனம் செய்து பிரபலமானவர். இவர் கடந்த 2021ம் ஆண்டு “ஆண்ட்டி இந்தியன்” என்ற படத்தை எழுதி, இயக்கினார். இந்த படம் தணிக்கைக்கு சென்றபோது சில காட்சிகளை வெட்ட சொல்லி வலியுறுத்தியும், அவற்றை வெட்டாமல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தணிக்கை சான்றிதழ் பெற்று படம் வெளியானது. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது சுமாரான வசூலையே பெற்றதாக கூறப்பட்டது. ஆனால் சிறிய பட்ஜெட் படம் என்பதால் மற்ற வழிகளில் லாபம் பார்த்துவிட்டதாக […]

Continue reading …

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் வருணுக்கு பாராட்டு!

Comments Off on இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் வருணுக்கு பாராட்டு!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பல்வேறு ஜானர்களை தடையின்றி ஒன்றிணைத்து, ஒவ்வொரு பிரேமிலும் தலைசிறந்த படைப்புகளை உருவாக்கும் திறமையில் புகழ்பெற்றவர். சினிமா உலகில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக பார்வையாளர்களைக் கவர்ந்து, பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றவர். தற்போது அவரது இயக்கத்தில் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ திரைப்படம் ஒரு பரபரப்பான ஆக்‌ஷன்-பேக் படமாக அமைந்து வெளியாக உள்ளது. இப்படம் (மார்ச் 1, 2024) உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. இத்திரைப்படத்தை உருவாக்கிய அனுபவத்தை கௌதம் […]

Continue reading …

விண்வெளிக்கு செல்லும் தமிழக வீரர்!

Comments Off on விண்வெளிக்கு செல்லும் தமிழக வீரர்!

தமிழகத்தை சேர்ந்த அஜித் கிருஷ்ணன் இஸ்ரோவிலிருந்து முதன்முறையாக ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்ல உள்ள வீரர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். கடந்த காலங்களில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலம், நிலவிற்கு சந்திரயான், செவ்வாய்க்கு மங்கள்யான் என பல விண்கலன்களை விண்ணில் ஏவி வல்லரசு நாடுகளுக்கு நிகரான முயற்சிகளை குறைந்த பொருட்செலவில் செய்து காட்டியுள்ளது. அவ்வகையில் இந்தியாவிலிருந்து இஸ்ரோ மூலமாக முதன்முறையாக விண்வெளிக்கு இந்திய […]

Continue reading …

தமிழகத்தில் பாஜக 2வது பெரிய கட்சியா?

Comments Off on தமிழகத்தில் பாஜக 2வது பெரிய கட்சியா?

ஊடகங்கள் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் தீவிரமாக இருப்பது குறித்து கருத்துக்கணிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன. திமுக தான் பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்த இடத்தை பிடிப்பது யார் என்பதில் தான் தற்போது பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த கால ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள் தான் மாறி மாறி முதல் இரண்டு இடங்களை பிடித்து வந்தது. தற்போது இரண்டாவது இடத்தை அதிமுக பறி கொடுக்கும் என்ற […]

Continue reading …

மீண்டும் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி!

Comments Off on மீண்டும் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி!

சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. செந்தில் பாலாஜி மீதான வழக்கை மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்க முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன் 14ம் தேதி சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரது ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது ஜாமின் மனு மீதான விசாரணை கடந்த 21-ம் தேதி நீதிபதி என்.ஆனந்த் […]

Continue reading …

இனி திமுகவை தமிழகத்தில் பார்க்க முடியாது; பிரதமர் மோடி!

Comments Off on இனி திமுகவை தமிழகத்தில் பார்க்க முடியாது; பிரதமர் மோடி!

பிரதமர் மோடி திமுகவை இனி தமிழகத்தில் பார்க்க முடியாது என நெல்லையில் ஆவேசமாக பேசியுள்ளார். நேற்று பல்லடம் பகுதியில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்த மோடி பேசினார். அதன் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி இன்று தூத்துக்குடியில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் நெல்லை பாளையங்கோட்டையில் நடந்த பிரமாண்டமான கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய போது “இனி திமுகவை […]

Continue reading …

பிரதமர் மோடிக்கு கனிமொழி பதிலடி!

Comments Off on பிரதமர் மோடிக்கு கனிமொழி பதிலடி!

பிரதமர் மோடி திமுகவை முற்றிலும் அகற்றுவோம் என கூறினார். அதற்கு திமுக எம்பி கனிமொழி திமுக அழியும் என சொன்ன பலர் காணாமல் போய்விட்டார்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார். பிரதமர் மோடி, தூத்துக்குடியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசிய திமுகவை இனி தேடினாலும் கிடைக்காது என்றும் திமுகவை முற்றிலும் அகற்றுவோம் என்றும் கூறியிருந்தார். இக்கூட்டத்தில் தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழியும் பங்கேற்றிருந்தார். தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த கனிமொழி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், “திமுக அழியும் […]

Continue reading …

விளவங்கோடு தொகுதி காலி!

Comments Off on விளவங்கோடு தொகுதி காலி!

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பிப்ரவரி 24ம் தேதி முதல் தேதி முதல் காலியானதாக தமிழ்நாடு அரசின் அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் விளவங்கோடு சட்டசபை தொகுதியில், 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், போட்டியிட்டு விஜயதரணி வெற்றி பெற்றார். கடந்த வாரம் அவர், பாஜகவில் இணைந்தோடு தனது எம்.எல்.ஏ., பதவியையும் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை, சபாநாயகர் அப்பாவு ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளதாக, சட்டசபை செயலர் சீனிவாசன், தமிழக தலைமை […]

Continue reading …

சோனி நிறுவனத்தில் பணிநீக்க நடவடிக்கை!

Comments Off on சோனி நிறுவனத்தில் பணிநீக்க நடவடிக்கை!

சமீபத்தில் இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதிலும் உள்ள முன்னணி நிறுவனங்கள் மீண்டும் பணி நீக்க நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதன் வரிசையில் தற்போது சோனி நிறுவனம் தனது பிளே ஸ்டேஷன் பிரிவில் உள்ள 900 பேர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல முன்னணி நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பணி நீக்க நடவடிக்கையை எடுத்தது. அதனால் ஆயிரம் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். தற்போது […]

Continue reading …