Home » Entries posted by Shankar U (Page 114)
Entries posted by Shankar

இளையராஜா – பாரதிராஜா மார்கழி திங்கள் அப்டேட்!

Comments Off on இளையராஜா – பாரதிராஜா மார்கழி திங்கள் அப்டேட்!

மனோஜ் பாரதிராஜா “தாஜ்மஹால்” திரைப்படத்தின் மூலம் 1999ம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானார். பின் பல திரைப்படங்களில் நடித்தாலும் அவரால் பெரியளவில் திரையுலகில் வலம் வர முடியவில்லை. இதனால் அவர் தந்தையைப் போல இயக்குனராகும் முயற்சியில் ஈடுபட்டார். “சிவப்பு ரோஜாக்கள்” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இயக்குனராகும் கனவோடு இருந்த தன்னை தனது தந்தைதான் நடிகராக்கிவிட்டார் எனக் கூறியிருந்தார். தற்போது மனோஜ், “மார்கழி திங்கள்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தில் பாரதிராஜா, வினோத் கிஷன் உள்ளிட்டவர்கள் […]

Continue reading …

திருப்பதி தேவஸ்தானத்தின் அறிவிப்பு!

Comments Off on திருப்பதி தேவஸ்தானத்தின் அறிவிப்பு!

திருப்பதி திருமலை தேவஸ்தானம் ஒரு கோடி முறை ‘கோவிந்தா’ ‘கோவிந்தா’ என்று எழுதினால் குடும்பத்துடன் விஐபி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு கோடி முறை கோவிந்தா கோவிந்தா என கைப்பட எழுதி அனுப்ப வேண்டும், அவ்வாறு எழுதி கொண்டு வந்தால் குடும்பத்துடன் விஐபி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்று திருப்பதி தேவஸ்தானம் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 10,01,116ம் முறை கோவிந்தா கோவிந்தா என்று எழுதி வந்தால் ஒருவருக்கு மட்டும் […]

Continue reading …

பாரத தேசம் பெயர் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் மகிழ்ச்சி

Comments Off on பாரத தேசம் பெயர் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் மகிழ்ச்சி

புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் இந்தியாவை பாரத தேசம் என அழைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான செயல் என்று கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறும்போது, “பாரத தேசம் என்பது பெருமையை சேர்க்கும் ஒன்று என்றும் ஆங்கிலேயர்களின் சாயல் எங்கு எங்கு இருக்கிறதோ அதை கொஞ்சம் கொஞ்சமாக நீக்க வேண்டும். அதன் காரணமாக பாரத தேசம் என அழைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உதயநிதி ஸ்டாலின் தவறாக பேசிவிட்டு மறுபடியும் அதையே சொல்லிக் கொண்டிருக்கிறார். […]

Continue reading …

“பாரத்” வார்த்தை குறித்து டி.ஆர்.பாலு கருத்து

Comments Off on “பாரத்” வார்த்தை குறித்து டி.ஆர்.பாலு கருத்து

முன்னாள் மத்திய அமைச்சர் டி ஆர் பாலு “பாரத்” என இந்தியாவை அழைப்பதை தவறு என்று கூற முடியாது, ஏனெனில் பாரத் என்பது அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் இந்தியா என்ற பெயரை பாரத் என்ற பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி டிஆர் பாலு கூறும் போது, “பெரும்பான்மை இருப்பதால் பாஜக எதையும் செய்ய நினைக்கிறது. பாராளுமன்ற சிறப்பு […]

Continue reading …

பெண் விஞ்ஞானிக்கு கனிமொழி எம்பி வாழ்த்து

Comments Off on பெண் விஞ்ஞானிக்கு கனிமொழி எம்பி வாழ்த்து

தென்காசியைச் சேர்ந்த திருமிகு. நிகர் ஷாஜி #AdityaL1 விண்கல திட்ட இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவருக்கு திமுக எம்பி கனிமொழி வாழ்த்து கூறியுள்ளார் சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி ஏவுகலன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து புவிவட்டப்பாதையில் சுற்றிவரத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி, “சந்திரயான் வெற்றியைத் தொடர்ந்து, இந்தியா தனது விண்வெளி பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த மனித இன நன்மைக்கும், இந்த பிரபஞ்சத்தை சரியாக புரிந்து கொள்வதற்கான […]

Continue reading …

செல்போன் கடை அடித்து உடைப்பு

Comments Off on செல்போன் கடை அடித்து உடைப்பு

திமுக மாவட்ட செயலாளர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் உள்ளிட்ட சிலர் ஒரு செல்போன் கடைக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் உள்ளிட்ட சிலர் ஒரு செல்போன் கடைக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கியதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான இக்காட்சியில், ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் உதவியாளர் அஜித் சேதுபதி தனது கூட்டாளிகள் உட்பட […]

Continue reading …

கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவுக்கு மாணவர்கள் எதிர்ப்பு!

Comments Off on கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவுக்கு மாணவர்கள் எதிர்ப்பு!

கொல்கத்தாவில் உள்ள கல்லூரி ஒன்று கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வரக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவிற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்கால இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடைகளிலும் ஏராளமான கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் விற்பனை செய்து வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு லேசாக கிழிந்த ஜீன்ஸ் அணிந்து வந்த இளைஞர்கள் தற்போது மிக அதிகளவில் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்களை […]

Continue reading …

அமேசான் ஓடிடி தளத்தில் ‘ஜெயிலர்’!

Comments Off on அமேசான் ஓடிடி தளத்தில் ‘ஜெயிலர்’!

ஆகஸ்ட் 10ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இத்திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்தது. திரைப்படம் வரலாறு காணாத வசூலை பெற்றதையடுத்து ரஜினிகாந்த், நெல்சன் ஆகிய இருவருக்கும் சொகுசு காரை கலாநிதி மாறன் பரிசாக கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி ரஜினிகாந்த்துக்கு லாபத்தில் கிடைத்த பங்கையும் பகிர்ந்து கொண்டார் என்றும் செய்திகள் வெளியாகின. திரையரங்குகளில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘ஜெயிலர்’ திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி அமேசான் […]

Continue reading …

காமெடி நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்!

Comments Off on காமெடி நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்!

“கோலமாவு கோகிலா” திரைப்படம் நெல்சன் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம். இத்திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் ஜாக்குலின் தந்தையாக நடித்த குணச்சித்திர மற்றும் காமெடி நடிகர் ஆர்எஸ் சிவாஜி இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரபல தயாரிப்பாளர் எம்ஆர் சந்தானம் மகனும் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் சந்தான பாரதியின் சகோதரருமான ஆர்எஸ் பாரதி காலமானார். இதையடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்த அவரது வளசரவாக்கம் வீட்டிற்கு திரையுலகினர் விரைந்து வருகின்றனர். கமலஹாசனின் பல […]

Continue reading …

நாசாவின் அதிர்ச்சி தகவல்!

Comments Off on நாசாவின் அதிர்ச்சி தகவல்!

சமீபத்தில் ரஷ்யா நிலவை ஆய்வு செய்வதற்காக லூனா 25 என்ற விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியானது. நிலவை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா அனுப்பிய விண்கலம் நொறுங்கி விழுந்ததால், நிலவின் மேற்பரப்பில் புதிதாக 10 மீட்டர் விட்டதிற்கு பள்ளம் ஒன்று இருப்பதை நாசாவின் எஸ்ஆர்ஓ ஆர்பிட்டர் கண்டுபிடித்துள்ளது. இந்த பள்ளம் ரஷ்யா அனுப்பிய விண்கலத்தால் தான் ஏற்பட்டிருக்கலாம் என்று நாசா தகவல் தெரிவித்துள்ளது. இந்த பள்ளத்தால் நிலவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா […]

Continue reading …