Home » Entries posted by Shankar U (Page 121)
Entries posted by Shankar

தூங்காமல் படிக்க மாத்திரை உட்கொண்ட மாணவி!

Comments Off on தூங்காமல் படிக்க மாத்திரை உட்கொண்ட மாணவி!

பத்தாம் வகுப்பு மாணவி தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக நீண்ட நேரம் கண்விழித்து படிக்க மாத்திரை உட்கொண்டதால் மாணவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இறுதி தேர்வு குறித்து பள்ளிகளில் மாணவர்களுக்கான நெறிமுறைகள் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. முழு ஆண்டு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்பது மாணவ, மாணவர்களின் கனவாக உள்ளது. அதற்காக இரவில் நீண்ட நேரம் படித்து வருகின்றனர். அவ்வகையில் லக்னோவில் பொதுத்தேர்வுக்கு நீண்ட நேரம் […]

Continue reading …

காசாவில் 29 ஆயிரத்தை தாண்டிய பலி!

Comments Off on காசாவில் 29 ஆயிரத்தை தாண்டிய பலி!

காசா மக்கள் இஸ்ரேல் தாக்குதலினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து காசாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது. போர் காரணமாக உணவு, தண்ணீர், மருந்து போன்றவை கிடைக்காமல் காசா மக்கள் தவித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே மோதல் நீடித்து வருகிறது. குறிப்பாக பாலஸ்தீனத்தின் காசா பகுதியினை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். கடந்தாண்டு இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஹமாஸ் அமைப்பு தாக்குதலை […]

Continue reading …

தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினரின் எச்சரிக்கை!

Comments Off on தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினரின் எச்சரிக்கை!

தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஓடிடி பிரச்சனைக்கு முடிவு காணாவிட்டால் தியேட்டர்களை மூடிவிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திரையரங்குகளில் மாஸ் நடிகர்களின் படங்களை தவிர மற்ற படங்கள் போதிய வசூல் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு ஒரே காரணம் திரைப்படம் வெளியான ஒரே மாதத்தில் ஓடிடிக்கு வந்துவிடும் என்பதால் ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என்று பொதுமக்கள் திரையரங்குகளுக்கு வருவதில்லை என்று கூறப்பட்டுள்ளது. எனவே ஓடிடியில் ஒரே மாதத்தில் திரைப்படங்களை வெளியிடும் போக்கை […]

Continue reading …

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

Comments Off on செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2023 ஜூன் 14ல் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை பிப்ரவரி 16ல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டிருந்தது. அமலாக்கத்துறை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் […]

Continue reading …

வேளாண் பட்ஜெட் குறித்து வானதி சீனிவாசன் கருத்து!

Comments Off on வேளாண் பட்ஜெட் குறித்து வானதி சீனிவாசன் கருத்து!

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வேளாண் பட்ஜெட் ஏமாற்றத்தை அளிக்கிறது என தெரிவித்துள்ளார். இன்று விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தமிழக சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள் இந்த பட்ஜெட்டை வரவேற்று வருகின்றன. வேளாண் பட்ஜெட் குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவுமில்லை, வேளாண் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இல்லை. மேலும் தமிழ்நாட்டில் வேளாண் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது. […]

Continue reading …

பற்கள் அழகாக்க நினைத்த இளைஞர் உயிரிழப்பு!

Comments Off on பற்கள் அழகாக்க நினைத்த இளைஞர் உயிரிழப்பு!

இளைஞர் ஒருவர் தனது பற்கள் அழகாக இருக்க வேண்டும் என சிகிச்சை மேற்கொள்ளச் சென்ற போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் இன்றைய காலத்தில் மிகவும் ஆடம்பரமாகவும், அந்தஸ்தாகவும் பார்க்கப்படுகிறது. அப்படி ஆடம்பரமாக செய்ய திருமணத்திற்காக பல லட்சம், கோடிகளை செலவழித்து வசதியான பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு மணம் செய்து வைக்கின்றனர். வசதியற்றோர் தங்கள் வசதிக்கேற்றபடி திருமணம் செய்கின்றனர். திருமணத்தின் போதும், திருமணம் நிச்சயதார்த்தத்தின்போது, மணமக்கள் அலங்காரம் செய்து அழகுப்படுத்திக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். ஆனால், […]

Continue reading …

நடிகையும் ஜெயலட்சுமி கைது!

Comments Off on நடிகையும் ஜெயலட்சுமி கைது!

நடிகையும், பாஜக துணைத்தலைவியுமான ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார். நடிகையும், பாஜக துணைத் தலைவியுமான ஜெயலட்சுமியை சினேகன் அறக்கட்டளை தொடர்பாக பாடலாசிரியர் சினேகன் அளித்த புகாரில் போலீசார் கைது செய்துள்ளனர். அறக்கட்டளையின் உரிமை தொடர்பாக சினேகனுக்கும், ஜெயலட்சுமிக்கும் இடையே மோதல் வெடித்தது. நடிகை ஜெயலட்சுமி மீது பாடலாசிரியரும் நடிகருமான சினேகன் போலீசில் புகாரளித்திருந்தார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் நடிகை ஜெயலட்சுமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியாக சினேகன் செயல்பட்டு வருகிறார்.

Continue reading …

முதல் முறையாக மாநிலங்களவைக்கு சோனியா காந்தி தேர்வு!

Comments Off on முதல் முறையாக மாநிலங்களவைக்கு சோனியா காந்தி தேர்வு!

சோனியா காந்தி ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் 27ம் தேதி 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் முதல் தலைவர் சோனியா காந்தி, ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதையடுத்து கடந்த 14ம் தேதி ஜெய்ப்பூரில் தனது வேட்புமனுவை சோனியா காந்தி தாக்கல் செய்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு […]

Continue reading …

சண்டிகர் மேயர் தேர்தல் முடிவு ரத்து!

Comments Off on சண்டிகர் மேயர் தேர்தல் முடிவு ரத்து!

உச்சநீதிமன்றம் சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. கடந்த மாதம் 30ம் சண்டீகர் மேயர் மற்றும் துணை மேயருக்கான தேர்தல் நடைபெற்று வாக்குப்பதிவு நடந்தது. இதில், மொத்தம் பதிவான 36 வாக்குகளில் பாஜக 16 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தது. இந்தியா கூட்டணியில் போட்டியிட்ட 12 கவுன்சிலர்களின் வாக்குகள் செல்லாது என்று அறிவித்து, பெரும்பான்மைக்கு […]

Continue reading …

‘நைக்’ ஷூ கம்பெனியின் அதிர்ச்சி தகவல்!

Comments Off on ‘நைக்’ ஷூ கம்பெனியின் அதிர்ச்சி தகவல்!

‘நைக்’ ஷூ கம்பெனியின் அதிர்ச்சி தகவல்! உலகிலுள்ள பல முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை கடந்த சில ஆண்டுகளாக பணி நீக்கம் செய்து வருகிறது. தற்போது சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஷூ கம்பெனியான ‘நைக்’ நிறுவனம் 1600 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ‘நைக்’ நிறுவனத்திற்கு லாபம் குறைந்து வருவதையடுத்து நிதி நிலைமையை சரி செய்வதற்காக பணி நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. உலகளவில் புகழ்பெற்ற ஷூ கம்பெனியான ‘நைக்’ நிறுவனம் […]

Continue reading …