
காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி பாஜகவில் இன்று இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறியுள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும் அதற்கு காங்கிரஸ் மேலிடம் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக விஜயதாரணி பாஜகவில் இணையுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவியது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்காமல் விஜயதாரணி டில்லியில் முகாமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. டில்லியில் உள்ள விஜயதாரணி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் இன்று […]
Continue reading …
சென்னை உயர் நீதிமன்றம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் உள்ளிட்ட 11 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடந்தாண்டு கரூர் வேலுசாமிபுரத்தில் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதாகவும் கரூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி முனுசாமி உள்பட 11 பேருக்கு எதிரான வழக்கு கரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “ஒருவர் கட்சியை விட்டு மற்றொரு கட்சிக்கு தாவும் போது, ஏற்கனவே இருந்த கட்சியை விமர்சிப்பது நல்லதல்ல” என்று தெரிவித்தார். தேர்தல் நேரத்தில் பாஜகவில் இருந்து விலகி நடிகை கௌதமி உட்பட ஒரு சிலர் அதிமுகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித் அவர், “தேர்தலின் போது ஒரு சிலர் கட்சியை விட்டு மற்றொரு கட்சிக்கு செல்வது சகஜம் தான். உறுதியளித்தபடி ராஜபாளையத்தில் சீட் வழங்காததால் பாஜகவில் இருந்து […]
Continue reading …
முன்னாள் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து முதலில் விலகினார். பின்னர் அனைத்து போட்டிகளிலிருந்தும் விலகினார். பிசிசிஐ தரப்பை கடைசி வரை தொடர்பு கொள்ளாமல் இருந்த கோலி, கடைசி கட்டத்தில் போனில் தான் முழு தொடரிலிருந்தும் விலகிக் கொள்வதாக கூறினாராம். அதனால் அவருக்கு மாற்று வீரராக சர்பராஸ் கானை அணியில் இணைத்துள்ளனர். கோலி தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் ஒரு முக்கியமான டெஸ்ட் தொடரை இதுவரை இழந்ததே இல்லை. ஐபிஎல் […]
Continue reading …
தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படத்தில் சிம்பு நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவருகிறது. சிம்பு படத்துக்காக நீளமாக முடிவளர்த்து கெட்டப்பை எல்லாம் மாற்றியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் ரகசியமாக சென்னையில் நடந்து முடிந்துள்ளது. விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வீடியோவோடு வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஆனால் அப்படி எந்த வீடியோவும் வெளியிடவில்லை. இப்போது முன்தயாரிப்பு பணிகள் நடந்துவரும் நிலையில் […]
Continue reading …
தற்போது ஜெயம் ரவி ஒன்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படமும், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நித்யா மேனனோடு ஒரு படத்திலும் நடிக்கிறார். இந்த படங்களுக்கு இடையில் ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷோடு “சைரன்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீசாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. சமீபகாலமாக ஜெயம் ரவியின் அகிலன் மற்றும் இறைவன் ஆகிய திரைப்படங்கள் மோசமான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றன. “சைரன்” இந்த […]
Continue reading …
“குட்நைட்” திரைப்படம் கடந்த ஆண்டு மே மாதம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது. பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீசான இத்திரைப்படம் பலரது பாராட்டுகளையும் குவித்தது. அதே தயாரிப்பு நிறுவனத்துக்கு மணிகண்டன் “லவ்வர்” திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்ட போதே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. படத்தில் டாக்ஸிக் காதலராக மணிகண்டன் நடித்திருந்தார். தன்னுடைய கேரியர், காதல் வாழ்க்கை தொடர்பான தடுமாற்றங்களில் அவர் எவ்வளவு மோசமானவராக நடந்து கொள்கிறார், அதில் […]
Continue reading …
அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் வானிலை மாற்றங்களை கண்டறிய ராக்கெட் மட்டும் போதாது ரேடார் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற கலந்து கொண்டார். பின் செய்தியாளர்களிடம் அவர், “இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. நமக்கு பேரிடர் காலங்களில் வானிலை மாற்றங்களால் ஏற்படும் விளைவுகளை முன்கூட்டியே கணித்து சொல்லும் அர்ப்புதமான வாய்ப்பாக இந்த […]
Continue reading …
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் பாஜக உடன் கூட்டணி வேண்டாம் என திடீரென எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிர்ச்சியடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பாஜகவுடன் தேமுதிக அல்லது அதிமுக வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கும் என்று இரு தரப்பினரிடமும் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 14 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி கொடுக்கும் அணியுடன் மட்டுமே கூட்டணி என்று பிரேமலதா அறிவித்திருந்தாலும் மூன்று தொகுதிகள் கொடுக்க மட்டுமே பாஜக மற்றும் அதிமுக […]
Continue reading …
டில்லியில் இன்று பாஜகவின் இரண்டு நாள் தேசிய கவுன்சிலர் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் நாடு முழுவதிலிருந்து 11,500 நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். மிக விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக, மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றது. இதையொட்டி பாஜக இரண்டு நாள் தேசிய கவுன்சில் கூட்டம் டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது. […]
Continue reading …