Home » Entries posted by Shankar U (Page 131)
Entries posted by Shankar

சொந்த வீட்டிலிருந்து வெளியேறிய பிரியங்கா சோப்ரா!

Comments Off on சொந்த வீட்டிலிருந்து வெளியேறிய பிரியங்கா சோப்ரா!

நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2000ம் ஆண்டு உலக அழகிப் பட்டத்தை வென்றவர். இவர் தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஜோடியாக “தமிழன்” திரைப்படம் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது உயிருக்கு பயந்து ரூ.160 கோடி மதிப்புள்ள வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். பின்னர், பாலிவுட் சினிமாவில் கிரிஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். இவர் கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை திருமணம் செய்து கொண்டார். தற்போது, ஹாலிவுட் மற்றும் வெப் சிரீஸ் […]

Continue reading …

மும்பை நகரில் வெடிகுண்டு மிரட்டல்!

Comments Off on மும்பை நகரில் வெடிகுண்டு மிரட்டல்!

மர்ம நபர் ஒருவர் மும்பை நகரில் 6 முக்கிய இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று மெசேஜ் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். மும்பையில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக வொர்லியில் உள்ள போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், மும்பை நகரில் 6 முக்கிய இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்ற மிரட்டலுடன் தகவல் வந்ததாக மும்பை போலீசார் கூறியுள்ளனர். இதையடுத்து, மும்பை மாநகர் முழுவதும் போலீசார் பாதுகாப்பு […]

Continue reading …

சிறுமிகளை வன்கொடுமை செய்த குற்றவாளி கைது!

Comments Off on சிறுமிகளை வன்கொடுமை செய்த குற்றவாளி கைது!

இன்று திருவான்மியூர் பகுதியில் 3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த யோவான் ஆண்டவர் என்பவரை நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை திருவான்மியூரில் சாக்லெட் தருவதாக அழைத்துச் சென்று 3 சிறுமிககள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை திருவான்மியூர் பகுதியில் சாக்லேட் தருவதாகக் கூறி, 3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் முக்கிய குற்றாவாளி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த அடையாறு பகுதியைச் சேர்ந்த […]

Continue reading …

டிக்கெட்டின்றி பயணம் செய்தவர்களிடமிருந்து அபராதம் வசூல்!

Comments Off on டிக்கெட்டின்றி பயணம் செய்தவர்களிடமிருந்து அபராதம் வசூல்!

பேருந்துகளில் டிக்கெட்டின்றி பயணித்த 4,223 பயணிகளிடமிருந்து அபராதத் தொகை ரூ.4,71,600- வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், உரிய பயணச்சீட்டு மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் வழங்கப்பட்டுள்ள பயண அட்டை இல்லாமல் பயணம் செய்வது, மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் 178(B) பிரிவின் படி தண்டனைக்குரிய குற்றமாகும். இதனால், மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. இதனை வலியுறுத்தி, பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை […]

Continue reading …

கிளாம்பாக்கம் செல்ல போக்குவரத்து கட்டணம் அதிகம்; அண்ணாமலை!

Comments Off on கிளாம்பாக்கம் செல்ல போக்குவரத்து கட்டணம் அதிகம்; அண்ணாமலை!

பாஜக தலைவர் அண்ணாமலை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குச் செல்லும் போக்குவரத்துக்கான கட்டணம் அதிகம்- என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “கோயம்பேடு பேருந்து நிலையத்தை மையப்படுத்தி, மெட்ரோ ரயில் நிலையம், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு இத்தனை ஆண்டுகளாகப் பல ஆயிரம் கோடி செலவு செய்துவிட்டு, பயணிகளுக்குத் தேவையான எந்த அடிப்படை வசதிகளும் செய்து முடிக்கப்பட்டாத கிளாம்பாக்கத்திற்கு, பேருந்து நிலையத்தை உடனே மாற்றுவோம் எனும் அடிமுட்டாள்தனமான செயல்பாட்டை என்னவென்று சொல்வது? கோயம்பேடு சுற்றியுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், சிறு […]

Continue reading …

அண்ணா நினைவு தினம்! ஸ்பெயினில் முதலமைச்சர் மரியாதை!

Comments Off on அண்ணா நினைவு தினம்! ஸ்பெயினில் முதலமைச்சர் மரியாதை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி ஸ்பெயினில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இன்று முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. சென்னையிலுள்ள அவரது நினைவிடத்தில் திமுக அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அங்கு அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் […]

Continue reading …

நடிகர் விஜய் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ்!

Comments Off on நடிகர் விஜய் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ்!

அமைச்சர் அன்பில் மகேஷ் “நடிகர் விஜய் எங்களுக்கு அருமையான அண்ணன். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எங்களுக்கு அவரை அறிமுகப்படுத்தி உள்ளார்” என்றும் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற தனது கட்சிப் பெயரினை நடிகர் விஜய் நேற்று அறிவித்து அரசியலுக்கு வருவதை உறுதி செய்துள்ளார். விஜய் அரசியலுக்கு வந்ததை அரசியல் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் நேற்று அமைச்சர் உதயநிதி, “விஜய்யின் அரசியல் வருகைக்கு தனது வாழ்த்துக்கள், இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு […]

Continue reading …

அத்வானிக்கு பாரத ரத்னா விருது! பிரதமர் மோடி புகழாரம்!

Comments Off on அத்வானிக்கு பாரத ரத்னா விருது! பிரதமர் மோடி புகழாரம்!

பிரதமர் மோடி அத்வானிக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் எனவும் இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர் செய்த பங்களிப்பு மகத்தானது எனவும் தெரிவித்துள்ளார். பாரத ரத்னா விருது பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள அத்வானியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நம் காலத்தின் […]

Continue reading …

நடிகர் ஜீவாவின் மியூசிக் லேபிள் வெளியீடு!

Comments Off on நடிகர் ஜீவாவின் மியூசிக் லேபிள் வெளியீடு!

நடிகர் ஜீவா இந்திய சினிமாவில் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். திரையுலகில் இன்று 21 வருடங்களை நிறைவு செய்கிறார். வெற்றிகரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய நடிகர் ஜீவா, அடுத்த கட்டமாக இசை தயாரிப்பில் இறங்கியுள்ளார். அவரது ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ ரெக்கார்ட்ஸ் மியூசிக் லேபிள் என்ற புதிய முயற்சியின் துவக்க விழா, சுதந்திரக் கலைஞர்களுக்கு அர்ப்பணித்து, அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான தளத்தை வழங்கும் நிகழ்ச்சி, ஊடகங்கள் மற்றும் நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஆர்யா, கார்த்தி, […]

Continue reading …

சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை?

Comments Off on சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை?

என்.ஐ.ஏ என்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னை உள்பட தமிழகத்தின் சில மாவட்டங்களில் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். பிற நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பினார் இந்த பகுதிகளில் ஊடுருவு இருப்பதாக வெளிவந்த தகவலை அடுத்து இந்த சோதனையை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இத்தகவல் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் சந்தேகத்தின் அடிப்படையில் தற்போது […]

Continue reading …