Home » Entries posted by Shankar U (Page 133)
Entries posted by Shankar

கஞ்சா சாக்லெட் விற்ற வாலிபர் கைது!

Comments Off on கஞ்சா சாக்லெட் விற்ற வாலிபர் கைது!

ஒடிசாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தாராபுரம் அருகே கஞ்சா சாக்லேட் விற்பனை செய்து போது மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குடிமங்கலம் அருகே உள்ள பொட்டியம்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லெட் விற்கப்படுவதாக, அப்பகுதி பொதுமக்கள், தாராபுரம் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் கோவர்த்தனாம்பிகை தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா சாக்லெட் விற்பனையில் ஈடுபட்ட ஒரிசா மாநிலத்தை சேர்ந்த ஜஜாபூர் […]

Continue reading …

நடுரோட்டில் தீப்பிடித்த கார்!

Comments Off on நடுரோட்டில் தீப்பிடித்த கார்!

சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காரில் இருந்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். கடலூர் மாவட்டம் பெண்ணடம் காமராஜர் தெருவை சேர்ந்த மணிகண்டன் மற்றும் காமராஜ் ஆகிய இருவரும் பணியின் காரணமாக சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரயில்வே மேம்பாலத்தில் ஏறி சி.கொத்தங்குடி தோப்பு செல்லும் வழியில் திடீரென கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் பதறிப் போன மணிகண்டன் மற்றும் […]

Continue reading …

ஷங்கருக்கு எதிராக டுவீட் போடும் ராம்சரண் ரசிகர்கள்!

Comments Off on ஷங்கருக்கு எதிராக டுவீட் போடும் ராம்சரண் ரசிகர்கள்!

“கேம்சேஞ்சர்” திரைப்படத்தை ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிப்பில் ஷங்கர் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். இத்திரைப்படத்துக்காக கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதித் தந்துள்ளார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் பெருமளவுக்கு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்தாண்டு தொடங்கப்பட்ட படம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதற்குக் காரணம் இயக்குனர் ஷங்கர் “இந்தியன்” படத்தையும் அடுத்தடுத்து இயக்கி வருவதுதான். “இந்தியன் 2” இப்போது மூன்றாவது பாகமும் வர இருப்பதால் மேலும் அந்த படத்தின் ஷூட்டிங் நாட்கள் அதிகமாகியுள்ளன. இதனால் […]

Continue reading …

சோனியா காந்தி தேர்தலில் போட்டி இல்லையா?

Comments Off on சோனியா காந்தி தேர்தலில் போட்டி இல்லையா?

பாரதிய ஜனதாவுக்கு அயோத்தி கோயில் திறக்கப்பட்டதன் காரணமாக உத்தரப்பிரதேசத்தில் பெரும் செல்வாக்கு ஏற்பட்டுள்ளது. சோனியா காந்தி உத்தரபிரதேசத்தில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளதாகவும் அதுமட்டுமின்றி அவர் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் ராஜ்யசபா எம்பி ஆக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. சோனியா காந்தி ஒருவர் மட்டுமே கடந்த 2019ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ரேபேலி என்ற தொகுதியில் வெற்றி பெற்றார். ராகுல் காந்தி கூட அமேதி தொகுதியில் தோல்வியடைந்தார். இம்முறை மீண்டும் சோனியா காந்தி […]

Continue reading …

நாகேஷ் குடும்ப மூன்றாவது தலைமுறை நடிகர் ஹீரோவாக அறிமுகம்!

Comments Off on நாகேஷ் குடும்ப மூன்றாவது தலைமுறை நடிகர் ஹீரோவாக அறிமுகம்!

கடந்த 1933 ஆம் ஆண்டு தாராபுரத்தில் உள்ள மொழிஞ்சிவாடியில் பிறந்தவர்தான் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகராக இருந்தவர் நாகேஷ். ஆரம்ப காலத்தில் இந்திய ரயில்வே துறையில் வேலை செய்து வந்த நாகேஷ், நாடகத்துறையில் மீது உள்ள ஆர்வத்தால் நடிகரானார். அப்போது, பிரபல காமெடியனாக இருந்த சந்திரபாபுக்குப் போட்டியாகவும் அதேசமயம், தனது தனித்தன்மையுடன் படங்களில் நடித்துப் புகழ்பெற்றார். அவரது திறமைக்கேற்ப பிரபல பட அதிபர்கள் முன்னணி நடிகர்களான சிவாஜி, எம்.ஜி. ஆர் படங்களில் காமெடியனாக்கினர். 1000 படங்களுக்கு […]

Continue reading …

Paytm பேமெண்ட் சேவைகளை நிறுத்திய ரிசர்வ் வங்கி!

Comments Off on Paytm பேமெண்ட் சேவைகளை நிறுத்திய ரிசர்வ் வங்கி!

Paytm பேமெண்ட் வங்கி சேவைகளை இந்திய ரிசர்வ் வங்கி இன்று முதல் நிறுத்தியதாக அறிவித்துள்ளது. இனி Paytm செயலில் எந்தவொரு வாடிக்கையாளர் கணக்கு, ப்ரீபெய்டு கருவிகள், வாலட்கள் மற்றும் பாஸ்ட் டேக் போன்றவற்றில் டெபாசிட் அல்லது டாப்-அப்களை ஏற்க RBI தடை விதித்துள்ளது. இந்தத நடவடிக்கை Paytm நிறுவனத்திற்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. இந்தியாவில் மிகப்பெரிய பணம் செலுத்தும் நிறுவனங்களில் ஒன்றாக இருந்த Paytm நிறுவனம் 500 மில்லியன்க்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு […]

Continue reading …

மணிசங்கர் அய்யர் மகளுக்கு கடும் எதிர்ப்பு!

Comments Off on மணிசங்கர் அய்யர் மகளுக்கு கடும் எதிர்ப்பு!

மணிசங்கர் அய்யர் மகள் ராமர் கோயில் திறப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததால் கடும் கண்டனம் எழுந்துள்ளது. அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மன்னிப்பு கேளுங்கள் அல்லது வீட்டை காலி செய்யுங்கள் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிசங்கர் அய்யர் மகள் ராமர் கோவில் திறப்பு விழா அன்று தனது சமூக வலைத்தளத்தில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். இந்த உண்ணாவிரதம் மூலம் […]

Continue reading …

செல்போன் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி!

Comments Off on செல்போன் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி!

இன்று பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். அதில் பல்வேறு வரி சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பே செல்போன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சில பொருள்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. செல்போன் தயார்பில் பயன்படுத்தப்படும் பேட்டரி கவர், முன்பக்க, நடுப்பக்க, பின்பக்க கவர், லென்ஸ், ஸ்குரு, சிம் சாக்கெட் உள்ளிட்ட சில பொருள்களுக்கு 15 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில் […]

Continue reading …

டாஸ்மாக் மது வகைகள் விலை உயர்வால் அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்!

Comments Off on டாஸ்மாக் மது வகைகள் விலை உயர்வால் அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்!

இன்று முதல் தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது வகைகளின் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் அரசுக்கு சொந்தமான இயங்கி வருகின்றன. இதில் பல்வேறு வகையான மதுபானங்கள் விற்கப்பட்டு வருகிறது. மதுப்பிரியர்களின் விருப்ப பானமான பிராந்தி குவார்ட்டர் ஒன்று ப்ராண்டை பொறுத்து குறைந்தது ரூ.180ல் இருந்து விற்பனையாகி வருகிறது. முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலை வைத்து டாஸ்மாக் ஊழியர்கள் விற்பனை செய்வதாக எழுந்த புகாரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சமீப […]

Continue reading …

நிதி அமைச்சரை வாழ்த்திய குடியரசுத் தலைவர்..!

Comments Off on நிதி அமைச்சரை வாழ்த்திய குடியரசுத் தலைவர்..!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தார். நேற்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு முதல் முறையாக வருகை தந்த குடியரசு தலைவர் முர்முவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நடந்த கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், கடந்த 6 மாதங்களாக பொருளாதார வளர்ச்சி 7 […]

Continue reading …